துருக்கி-இலங்கை நட்புரவு அமைப்பினால் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள்!

அஸ்ரப் ஏ சமத்-

துருக்கி-இலங்கை நட்புரவு அமைப்பினால் நிர்வகிக்கப்படும் லேணியம் சர்வதேச  பாடசாலையின மாணவர்களுடன் இலங்கையின் சுதந்திர தினத்தினை முன்ணிட்டு பெப்ரவரி 6ஆம் திகதி காலை 09.00 – 11.00 மணிவரை கொழும்பு -7 சுதந்திர சதுக்கத்தில் சுதந்திர தின வைபவங்கள் கொண்டாடபட உள்ளது.

இக் கல்லூரியில் பயிலும் 400 மாணவர்களும் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்களும் கலந்து கொள்வார்கள்.

இவ்விடயம் சம்பந்தமாக ராஜகிரிய லேனியம் பாடசாலையில் ஊடகவியலாளர் மாநாடொன்று இன்று நடைபெற்றது. 

இங்கு கருத்து தெரிவித்த துருக்கி நாட்டவரான இலங்கை- துருக்கி நட்புறவு கலை கலாச்சார அமைப்பின் தலைவர் ஹால்டின் அர்சலர் -கடந்த 5 வருடமாக கொழும்பில் வாட் பிளேசிலும், ராஜகிரியவிலும் எங்களது இந்த லேணியம் பாடசாலை சிறப்பாக இயங்கி வருகின்றது. இங்கு துருக்கி நாட்டவர்களும் இலங்கையில் சிறந்த ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டு இந்தக் கல்லூரி இயங்கி வருகின்றது.

நாங்கள் துருக்கிய நாடாக இருந்தாலும் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது அந்த நாட்டின சுதந்திரத்தை அந்த நாட்டவர்களுடன் இணைந்து நாங்கள் கொண்டாடுகின்றோம். 

இதனை முன்னிட்டு எங்களது வோட் பிளேஸ் ஆரம்பப்ப பாடசாலையில் இருந்து எமது மாணவர்களும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் சுதந்திர சதுக்கத்திற்கு நடைபவணி செய்து முவ் மதங்களது ஆசி வேண்டி சுதந்திர தினம் அதிபர் தலைமையில் நடைபெறும்.

நாடாளரீதியில் ஒரு மணிதனுக்கு உணவு, நீர் இருந்தாலும் சுதந்திரமின்றி வாழமுடியாது என்ற தலைப்பில் நாடளாரீதியில் அரச தணியார் பாடசாலைக பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலான குருந்திரைப்படப்போட்டி, கட்டுரைப்போட்டி, சித்திரப் போட்டி, காற்பந்தாட்டப்போட்டி விஞ்ஞான வினா விடைப்போட்டிகள் நடாததப்பட்டன.

இப் போட்டிகளில் முறையே வெற்றிபெற்ற மாணவர்களுக்குமுதலம் பரிசு 1 இலட்சம், இரண்டாம் பரிசு 75 ஆயிரம் ருபா, முன்றாம் பரிசு 50 ஆயிரம் மற்றும் 10 ஆறுதல் பரிசு 20 ஆயிரம் ருபா பரிசுகள் எதிர்வரும் 9ஆம் ;திகதி பி.பகல் 06.30 மணிக்கு பிசப் கல்லூரியில் வைத்து வழங்கப்படும் என தெரிவித்தனர்.

இந் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு சகல மாணவர்கள், பொதுமக்களையும் துருக்கிய இலங்கை கலை கலாச்சார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -