.jpg)
த.நவோஜ்-
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை பாடசாலையில் கல்வி பயிலும் உயர்தர வகுப்பு இந்து மாணவர்களுக்கும், இந்து இளைஞர்களுக்கும் வதிவிடத்துடன் நடாத்தும் இந்து சமய மேன்பாட்டு தலைமைத்துவ பயிற்சி நெறி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாமாங்கம் விக்னேஸ்வரா திருத்தொண்டர் சபை மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பேரவையின் பொருளாளர் நா.புவனசுந்தரம் அவர்களால் நந்திக் கொடி ஏற்றப்பட்டு தலைமைத்துவ பயிற்சி நெறிகள் யாவும் நடைபெற்றது. இப்பயிற்சி நெறியில் இறுநூறுக்கு மேற்பட்ட இந்து உயர்தர மாணவர்கள், இந்து இளைஞர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இங்கு முதலாம் நாள் நிகழ்வாக கிழக்கு மக்களின் ஆலய சடங்கு முறைகள் காட்டும் இந்து சமய மேன்பாட்டு விழுமியங்கள் தொடர்பாக விஷ்வ பிரம்மஸ்ரீ.வை.இ.சந்திரகாந்தன் குருக்கள், இந்து சமூதாய மேம்பாட்டில் இந்துக் குருமார்களின் பங்களிப்பு தொடர்பாக கல்லடி காயத்திரி பீட பிரதமகுரு சிவஸ்ரீ.சிவயோகச் செல்வன் த.சாம்பசிவம் சிவாச்சாரியார், திருக்குறல் காட்டும் இந்துக்களின் வாழ்வியல் பண்புகள் தொடர்பாக ஆசிரியர் தி.புனனேசராசா, ஈழத்தில் இந்து சமயத்தின் பூர்வீகமும், தமிழ் இனத்தின் பூர்வீகமும் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இந்து கலாசார அதிகாரியுமான செல்வி.க.தங்கேஸ்வரி ஆகியோரால் கருத்துரைகள் வழங்கப்பட்டதோடு, பண்ணிசை ஒய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் செல்வி.ரஜனி நடராசா மற்றும் கல்லடி காயத்திரி பீட பிரதமகுரு சிவஸ்ரீ.சிவயோகச் செல்வன் த.சாம்பசிவம் சிவாச்சாரியார் ஆகியோரால் நிகழ்;த்தப்பட்டது. அத்தோடு குழுச் செயற்பாட்டு நிகழ்வுகளும் நடாத்தப்பட்டது.
மேலும் இரண்டாம் நாள் நிகழ்வாக யோகாசனம் மட்டக்களப்பு சக்தி ஆனந்த யோகா வித்தியாசாலை ஆசிரியர் செல்வி.சி.சிவசக்தியினால் நிகழ்த்தப்பட்டது. அத்தோடு இந்து சமய பண்பாட்டு விழுமியங்களை பாதுகாப்பதில் தற்கால இந்து சமூகத்தின் பங்களிப்பு தொடர்பாக கிழக்கு பல்கலைக் கழக இந்து நாகரீக சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.முகுந்தன், இந்து சமுதாய மேன்பாட்டில் இந்து ஆலயங்களின் பங்களிப்பு தொடர்பாக வாகரை பிரதேச இந்து கலாசார உத்தியோகத்தர் கை.சசிகுமார்;, இந்து இளைஞர்களின் வாழ்வில் இந்து ஆன்மீகத்தின் அவசியம் தொடர்பாக மட்டக்களப்பு மேற்கு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன், அன்றைய இந்துவின் மெஞ்ஞானமே இன்றைய விஞ்ஞானம் தொடர்பாக ஓய்வு பெற்ற அதிபர் மு.தவராசா, புராண இதிகாசங்கள் காட்டும் இந்து அறநெறிப் பண்புகள் தொடர்பாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் செ.கமலநாதன் ஆகியோரால் கருத்துரை வழங்;கப்பட்டது.
இந்து சமய மேன்பாட்டு தலைமைத்துவ பயிற்சி நெறியின் இறுதி நாள் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் போது அதிதிகளான மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உதவியாளர் திருமதி.எழில்வாணி பத்மகுமார், கிழக்கு இந்து ஒன்றியச் செயலாளர் கதிர் பாரதிதாசன், மட்டக்களப்பு இந்து வர்த்தக சங்க பிரதிநிதிகளான எஸ்.செல்வராசா, க.சிவபாதசுந்தரம், த.கிரிதரன், க.செல்வராசா, எஸ்.அமிர்தலிங்கம், பேரவையின் பிரதிநிதிகளான ச.ஜெயகரன், ச.ஜெயலவன், பூ.ஐங்கரநேசன், ந.குகதர்சன், ம.கோகுலன், பு.அரோசன், ச.துலக்ஷன், மோ.டிலக்ஷன், த.தனுஸ்காந், ஆ.ஆகாஸ் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது கலந்து கொண்டு தலைமைத்துவ பயிற்சி நெறியினை பெற்ற இந்து உயர்தர மாணவர்கள், இந்து இளைஞர்களுக்கு அதிதிகளால் சான்றிதழ் மற்றும் கல்வி உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது ஆன்மீகச் செயற்பாடுகளுக்கு பெரும் உதவி வழங்குவதுடன், சமூக சேவையாற்றி வரும் மட்டக்களப்பு வேல்முருகு ஸ்டோர் உரிமையாளரும், தொழிலதிபருமான க.செல்வராசா மற்றும் யோகாசனப் பயிற்சி வழங்கிய சக்தி ஆனந்த யோகா வித்தியாசாலை ஆசிரியர் செல்வி.சி.சிவசக்தி ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)