ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-
கல்குடா பிரதேசத்தில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுவதனால் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கின்றது.
இதன் காரணமாக மக்களை விழிப்புணர்ச்சியின் பக்கம் திசைதிருப்பும் நடவடிக்கையாக கல்குடாவில் மிகக் கூடுதலாக டெங்கு நுளம்புகளின் தாக்கம் காணப்படும் பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ள பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் இலங்கை தெளஹீத் ஜமாஅத்தின் கல்குடா கிளையும், மெகா விளையாட்டுக் கழகமும், றோயல் விளையாட்டுக் கழகமும் இணைந்து மேற்படி நடவடிக்கையில் சனிக்கிழமை (21.02.2015) ஈடுபட்டது.
மேலும் இந்த நடவடிக்கையில் இயந்திரங்களை கொண்டு பிரதேசத்தில் உள்ள கழிவுகள் அகற்றல், சுகாதார அதிகாரிகளுடன் வீடு விடாக சென்று டெங்கு நோய் தொடர்பான அறிவுறைகள் வழங்குதல், தெரு முனைப் பிரச்சாரம், துண்டு பிரசுரம் விநியோகித்தல் போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், இவர்களுக்கு மேலும் ஒத்தாசையும் மேலதீக அறிவுரைகளை வழங்குவதற்காக மட்டக்களப்பு மாவட்ட சுகாதார மேற்பார்வை அதிகாரி பி.தேவராசவுடன் பிரதேச சுகாதார அதிகாரி என்.எம்.எம்.சிஹான் கலந்து கொண்டார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)