அஸ்லம் எஸ்.மௌலானா-
கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நகர அபிவிருத்தி நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான றவூப் ஹக்கீமினால் இந்நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கான புதிய தவிசாளர் மற்றும் பணிப்பாளர்கள் அமைச்சர் ஹக்கீமினால் இன்று நியமனம் செய்யப்பட்டனர். இதன்போதே சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பருக்கு மேற்படி பதவிக்கான நியமனம் கடிதம் அமைச்சரினால் கையளிக்கப்பட்டது.
நகர அபிவிருத்தி நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சில் இன்று திங்கட்கிழமை காலை இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நியமனத்தின் பிரகாரம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் சார்பில் நாட்டிலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் பொறுப்பான பணிப்பாளராக இவர் செயற்படுவார் என அறிவிக்கப்படுகிறது.
.jpg)
.jpg)