பாலர் பாடசாலைகளுக்கு நவீன ஒலி பெருக்கிப் பெட்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு






பி. முஹாஜிரீன்-

'கிழக்கு மாகாண பாலர் பாடசாலைகள் கல்விப் பணியகம் பாலர்களின் கல்வி மேம்பாட்டிற்கு பெரும் பங்காற்றி வருவதுடன் பாலர் பாடசாலைகளின் துரித வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகிறது' என கிழக்கு மாகாண பாலர் பாடசாலைகள் கல்விப் பணியகத்தின் தவிசாளர் பொன் செல்வநாயகம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலைகளுக்கு நவீன ஒலி பெருக்கிப் பெட்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (02) அம்பாறை மாவட்ட பாலர் பாடசாலைகள் பணியகத்தில் நடைபெற்றது. பணியகத்தின் அம்பாறை மவாட்ட செயலாற்றுப் பணிப்பாளர் ஏ.எல். இப்றாஹிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பணியகத்தின் கிழக்கு மாகாண தவிசாளர் பொன் செல்வநாயகம் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தொடர்ந்து கிழக்கு மாகாண பாலர் பாடசாலைகள் கல்விப் பணியகத்தின் தவிசாளர் பொன் செல்வநாயகம் உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சரின் கீழ் செயற்பட்டுவரும் பாலர் பாடசாலைகளின் கல்விப் பணியகம் துரித வளர்ச்சி கண்டு வருவதுடன் பாலர் பாடசாலைகளில் கல்வி பயில்கின்ற மாணவர்கள், ஆசிரியர்களினது முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தி வருகிறது. எமது கல்விப் பணியகத்தினால் கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாலர் பாடசாலைகளிலும் ஒரே பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு அதனை விரிவுபடுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படடுள்ளன. இதேவேளை, இவ்வாறு எமது பணியகத்தினால் செயற்படுத்தப் பணிக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாத பாலர் பாடசாலைகளினது பதிவுகளை ரத்துச் செய்வதற்கும் திட்டமிட்டுள்ளோம். ஏனெனில் பாலர்களுக்கான கற்பித்தலானது ஒரு ஒழுங்குபடுத்தப்பட்டதாக அமைய வேண்டும். ஒவ்வொரு பாலர் பாடசாலையிலும் வௌ;வேறு விதமாக விரும்பியவாறு கற்பித்தல் நடைபெறுவது பொருத்தமானதல்ல.

இன்று நாங்கள், அம்பாறை மாவட்டத்திலுள்ள 806 பாலர் பாடசாலைகளில் 500 இற்கு மேற்பட்ட தமிழ் மொழி மூலமான பாலர் பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்ட்ட 26 பாலர் பாடசாலைகளுக்கு தலா சுமார் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான நவீன ஒலி பெருக்கிப் பெட்டிகளை வழங்குகின்றோம். இதேபோன்றே, பாலர்பாடசாலை ஆசிரியர்களைப் பயிற்றுவித்து ஆசிரியர் கைநூல்களையும் பாடத்திட்டத்தினையும் வழங்கியிருக்கிறோம். இவையெல்லாம் மாணவர்கள் செயற்பாட்டுடன் கூடிய கற்றலை மேற்கொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டுவதற்கே வழங்கப்படுகின்றன.

கல்வித் திணைக்களம், சிறுவர் நன்னடத்தைத் திணைக்களம், சுகாதாரத் திணைக்களம், பிரதேச செயலகங்கள் போன்ற சிறுவர்களுடனான சகல நிறுவனங்களுடனும் பாலர் பாடசாலை கல்விப் பணியகம் இணைந்து செயற்பட தயாறாக இருக்கிறது. இப்பணியகத்தின் செயற்பாடுகள் மூலம் ஆசிரியர்களை வளப்படுத்துவதற்கும் மாணவர்களது நலன்களைப் பேணக்கூடியவாறும் செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுவரை எமது பணியகத்தினால் பாலர் பாடசாலைகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் 1758 பாலர் பாடசாலைகளும், 3826 ஆசிரிர்களும், சுமார் 60 ஆயிரம் மாணவர்களும் இருக்கின்ற அதேவேளை, அரசாங்கத்தினாலும் பல்வேறு தொண்டு நிறுவனங்களினூடாகவும் பல வேலைத்திட்டங்களை செய்திருக்கின்றோம். மேலும் இதன் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு பாலர் பாடசாலைகளினது நிர்வாகிகளும் ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் பாலர் பாடசாலைகளினது பிரதேச இணைப்பாளர்களான எஸ்.எல். ஹபீல், எஸ்.எம். மாஹீர், எஸ்.எம். றிஸான், ஏ.எம். அனீஸ், ஆர். லியாஸ், எம். சூரியகலா, ஏ. றுவானிகா ஆகியோர் உட்பட பாலர் பாடசாலைகளினது நிர்வாகிகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -