பைசர் முஸ்தபாவுக்கு தகுதியான அமைச்சுப்பதவி வழங்கவும்- ஜனாதிபதிக்கு அப்துல் சத்தார் மகஜர்!

இக்பால் அலி-

டந்த அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவினர் கவனத்தில் கொள்ளப்பட வில்லை எனவும் இக்கட்சியின் மக்கள் பிரதிநிதியாக அமைச்சர் பைசர் முஸ்தபா மட்டுமே உள்ளார் எனவும் இவருக்கு தகுதிவாய்ந்த அமைச்சுப் பதவி வழங்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகஜர் ஒன்றை குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் குருநகல் மாநகர சபை உறுப்பினருமான அப்துல் சத்தார் அனுப்பி வைத்துள்ளார்.

அவர் அந்த கடிதத்தில் மேலும் சுட்டிக் காட்டுகையில் ஜனாதிபதியான மைத்திபால சிறிசேன மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு இந்நாட்டிலுள்ள அனைத்து  முஸ்லிம் மக்களும் நூற்றுக்கு 90 விகிதத்திற்கு மேற்பட்ட மக்கள் வாக்களித்துள்ளனர்.

கடந்த அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் அரசாங்கத்தினால் வழஙக்கப்படும் சலுகை வரப்பிரசாதங்கள் பெரியதாக எதுவுமே வழங்கப்பட வில்லை. 

இதேவேளை அமைச்சர் பைசர் முஸ்தபாவும் தங்களுடைய வெற்றிக்காக கட்சியை விட்டுத் தாவி கடுமையாக உழைத்தவர். உங்களுடைய ஆட்சியில் முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதிகளுக்கு முஸ்லிம்களை கௌரவப்படுத்தும் வகையில் தகுதிவாய்ந்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 

ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் முக்கிய பிரதிநிதியாக அமைச்சர் பைசர் முஸ்தபா மட்டும் அங்கம் வகிக்கின்றார். 

அவருக்கு தகுதி வாய்ந்த அமைச்சுப் பொறுப்பை வழங்குமாறு அந்த கடிதத்தில் அவர் மேலும் சுட்டிகாட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -