தமிழ்தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட திருக்கோவில் பிரதேச சபையின்; உறுப்பினரும் வைத்தியருமான (61) வயதுடைய வே. மகேந்திரன் சுகயீனமமுற்ற நிலையில் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த இருதினங்களாக சுகயீனமுற்ற நிலையில் அம்பாறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
தம்பிலுவை பிறப்பிடமாக கொண்ட இவர் வைத்தியராக பல வைத்தியசாலைகளில் கடமையாற்றிவந்துள்ளதுடன் தமிழ் தேசியத்தின் பால் ஈர்க்கப்பட்டு கடந்த பிரதேச சபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்ப்பில் தேர்தலில் போட்டியிட்டு பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
இவரின் ஈமைக்கிரிகைகள் வெள்ளிக்கிழமை நடைபெ;று தம்பிலுவில் இந்து மயானத்தில் தகனக்கிரிகைகள் இடம்பெறும் என உறவினர்கள் தெரிவித்தனர்.
