பள்ளிக்குடியிருப்பு சனசமூக நிலையத்தினை வைத்து விளையாடும் விளையாட்டு!

சுமார் 31 வருடங்களுக்கு முன் மறைந்த ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாஸ அவர்களின் ஆட்சிக் காலத்தில் கிராமிய மக்களது தேவைகளையும் உணர்வுகளையும் வெளிக்கொணரத் தக்கதொரு பொது நிர்வாக அமைப்பாக உருவாக்கப்பட்டது தான் சனசமூக நிலயமாகும்.

இவ்வாறான சனசமூக நிலயம் பள்ளிக்குடியிருப்புக் கிராமத்திற்கென ஒன்றே ஒன்றுதான் ஆரம்பத்தில் இருந்துவந்திருக்கிறது ஆனால் தற்போது அது தடம் தெரியாமலே போய்விட்டது. இப்படியிருக்கும் நிலையில் கடந்த 2014-08ம் மாதத்திலிருந்து எமது கிராமத்தில் இரண்டு சன சமூக நிலயங்கள் பொதுமக்களுக்குத் தெரியாமல் திடீரென முளைத்தியங்குவது சபைக் கணக்கறிக்கையின் படி தெரியவந்துள்ளது.

பிரதேச சபைக்குட்பட்ட வறிய மக்களின் அபிவிருத்திக்கென அரசினால் தற்போது மாதாந்தம் சபைக்கு வழங்கப்பட்டுவரும் 10இலட்சம் ரூபா நிதியை பிரதேச சபையில் உள்ள தவிசாளரும் உறுப்பினர்களும், அவர்களைச்சாரந்தவர்களும் மாத்திரம் பங்கிட்டுக்கொள்ளும்; சுயநல நோக்கோடு பட்டியடிப்பிட்டியில் பட்டியடிப்பிட்டி சனசமூக நிலயமென்றும்; 

பள்ளிக்குடியிருப்பில் அம்மார் சனசமூக நிலயமென்றும் மக்களுக்குத் தெரியாமல் இரண்டு சனசமூக நிலயங்களை இயக்கிவருவது மாத்திரமன்றி; அம்மார் சனசமூக நிலயத்திற்கும், பட்டியடிப்பிட்டி சனசமூக நிலயத்திற்குமென பல இலட்சம் ரூபாநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதும் பிரதேச சபையின் மாதாந்த கணக்கறிக்கையின் மூலம் காட்டப்பட்டள்ளது.

எமது கிராமத்தில் ஹதியா எடுத்துவாழ்கின்ற ஏழைகளும் பிறரிடம் கை நீட்ட வெட்கப்பட்டு வாழ்கின்ற குடும்பங்களும் இருக்கையில் உண்மையான பயனாளிகளைத் தேடி இனங்கண்டு உதவி செய்ய வேண்டிய ஆட்சியாளர்கள் இவ்வாறான உதவி செய்யப்பயன்படும் சனசமூக நிலயம் போன்ற நிறுவன அமைப்புகளை அவர்களின் தோதுக்காக உருவாக்கி அதற்கென பணமும் ஒதுக்கி அப்பணத்தினை அவர்களே பயன்படுத்தி அபிவிருத்தி என்ற பெயரில் சுயவிருத்தி செய்து கொண்டிருந்தால் மக்களது வறுமை நீங்குமா? நமது கிராமம்தான் செழிக்குமா..?

எச்.ஜே.எம்.இன்ஹாம்
எதிர்க்கட்சித்தலைவர் 
பிரதேச சபை அக்கரைப்பற்று
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -