காத்தான்குடியில் குழாய் நீர் பெறுவதற்கான நீதியுதவி பத்திரங்களை அமைச்சர் ஹக்கீம் வழங்கி வைப்பு!

பழுலுல்லாஹ் பர்ஹான்-
டந்த அரசின் காலத்தில் ஏற்பட்ட அநியாய ஆட்சியின் அட்டூழியங்களை முடிவுக்கு கொண்டுவர புதிய சட்ட திருத்தங்களை அமுல்படுத்த புதிய அரசாங்கம் தயாரகி வருகின்றது. இதன் மூலம் பெண்களுக்கான வன்முறைகள் ,சிறுவர்களுக்கான துஷ்பிரயோகம் போன்றவைகளை ஒழிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,நகர அபிவிருத்தி நீர் வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சருமான றவூப் ஹக்கீம் 01-02-2015 நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காத்தான்குடியில், காத்தான்குடி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மகளீர் அணியும்,பெண்களுக்கும் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையில் கூறினார்.

அமைச்சர் ஹக்கீம் தொடரந்து பேசுகையில்: முஸ்லிம் சமூகம் வரிந்து கட்டிக்கொண்டு கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவை அமோக வெற்றியீட்டச் செய்த பெரும் பங்கினை மெச்சும் ஜனாதிபதி முஸ்லிம் சமூகத்தின் நலனுக்கு தாம் கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பெண்களுக்கும் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும் ,நகர சபை உறுப்பினரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாதர் அமைப்பாளருமான ஜனாபா சல்மா அமீர் ஹம்ஸா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சவூதி அரேபிய நாட்டு நிதியில் கல்குடா அல் கிம்மா நிறுவனத்தினால் 50 வசதி குறைந்த குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்பு இலவசமாக பெறுவதற்கான நீதியுதவி பத்திரங்களை அமைச்சர் ஹக்கீம் வழங்கி வைத்தார்.

இதன் போது அமைச்சர் றவூக் ஹக்கீமின் சேவைகளை பாராட்டி நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் அமைச்சரை மாதர் அமைப்பு பொன்னாடை போர்த்தியும் கௌரவித்தது.

இங்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாதர் அமைப்பில் இணைந்து கொண்ட மாதர்களுக்கு கட்சி உறுப்புரிமை பத்திரங்களும் அமைச்சர் ஹக்கீமினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் முபீன், கல்குடா அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஹாரூன் (ஸஹ்வி) உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -