ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் -
எனது 35 வருடகால அரசியல் வரலாற்றில் நான் கண்ட மக்கள் தலைவன் என்றால் அது ஈரோஸ் இயக்கத்தின் தலைவன் பாலகுமாரேயாகும். நாங்கள் முகாமிலே இருந்த வேலையில் எங்களை எல்லாம் ஓவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து தூக்கத்தில் இருந்த எங்களின் பின் பக்கத்தில் தட்டி எழுப்பி விட்டு அந்த முகாமின் முற்றைத்தை எல்லாம் சுத்தம் செய்து, ஒரு பீன்கான் தட்டில் சோற்றினை பிசைந்து எங்களுக்கு தந்ததற்கு பிற்பாடு எங்களை உடற்பயிற்சி செய்யுமாறு பணிப்புரை வழங்கிய தலைவனே எனக்கு அரசியல் கற்றுத்தந்த எங்கள் ஈரோஸ் தலைவன் பாலகுமாராகும்.
அது மட்டுமல்லாமல் பெரும் தலைவன் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரஃப் அவர்களின் மரணத்துக்கு பிற்பாடு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை காப்பாற்றுவதற்கான வலுவையும் அறிவையும், ஞானத்தையும், புலனாய்வுத் திறனையும் எனக்கு தந்ததும் ஈரோஸ் தலைவன் பாலகுமாராகும். ஆகவே இன்று வரைக்கும் முஸ்லிம் காங்கிரஸ் காப்பாற்றப்பட்டது என்றால் இந்த ஈரோஸ் பசிரே தவிர முஸ்லிம் காங்கிரசின் பசீர் அல்ல என்ற கருத்தினை 22.02.2015 ஞாயிற்றுக் கிழமை ஏராவூரில் மர்ஹூம் றூபி மொஹைத்தின் மாதிரிக்கிராமம் ஒன்றினை திறந்து வைத்ததற்கு பிற்பாடு *இம்முறையும் பசிர் வெல்லுவாறு அது எப்படி என்று மேடையில் சொல்லுவாரு* என்ற தலைப்புடன் இடப்பெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னால் அமைச்சரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அல்-ஹாஜ் பசீர் சேகு தாவூத் தெரிவித்தார்.
முஸ்லிமாகவும், முஸ்லிம் காங்கிரசின் தலைவராக இருந்து கொண்டு ஈரோஸின் தலைவர் பாலகுமாரை விடுதலை செய்யக்கோரி கடிதம் எழுதியது சரிதானா? என பலர் தன்னிடம் கேற்பது சம்பந்தமாகவே நான் பாலகுமாரைப் பற்றி இங்கு உரையாற்ற கடமைப்பட்டுள்ளேன் எனக் கூறிய முன்னால் அமைச்சர் பசீர் சேகுதாவூத் அவர்கள் மேலும் கூறியதாவது,…. நான் இயக்கத்தில் இருக்கும் போது பாலகுமாரிடம் கற்றுக்கொண்ட அனுபவப்படிப்பு, அரசியல், ஆயுதம், வியூகம், புலனாய்வுத் துறை என்பனவே முஸ்லிம் காங்ரசியும் அதன் தலைமையையும் காப்பாற்ற எனக்கு உதவியது. அது மட்டுமல்லாமல் முதன் முதலில் வன்னி முகாமிலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பம் என்றால் ஈரோஸ் தலைவன் பாலகுமாரின் குடும்பமே ஆகும்.
இப்போதும் எனக்கு அரசியல் கற்றுத்தந்த தலைவன் பாலகுமார் உயிருடன் இருக்கின்றார் என்ற சந்தேகம் எனக்குள் இருக்கின்றது. ஏனென்றால் கடந்த வட மாகாண சபைத் தேர்தலில் பாலகுமாரை கொண்டு வந்தால் வெல்ல முடியுமா என்ற கேள்வியினை பசில் ராஜபக்ஸ்ஸவினால் கேற்கப்பட்டதாக அறியக்கிடைத்தது. பாலகுமார் பசில் ராஜபக்ஸ நினைப்பது போல் தன்மானம் இழந்த, இடம் மாறித்திறிகின்ற தலைவனாக நான் பாலகுமாரை பார்த்ததில்லை. பாலகுமார் மக்களுக்காக போராடுபவன். சுத்தமான அரசியல் செய்யபவன், தத்துவ வாதி, நான் கண்ட தமிழ் தலைவர்களில் உன்னத தலைவன். அதிலும் என்னுடைய பார்வையில் சொல்லப் போனால் தந்தை செல்வாவை விடவும் பெரும் தலைவன். எனக்கு உயிர் ஊட்டியவர், உணர்வூட்டியவரும் அவரேயாவார். முதன் முதலில் எனக்கு பாராளுமன்ற பதவியை ஈரோஸ் தந்திரா விட்டிருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் என்னை கணக்கெடுத்தும் பார்த்திருக்காது. நாங்கள் எல்லோரும் முஸ்லிம் ஆகையால் எமது மார்க்கத்தில் மாற்றுமத்தினர் செய்த உதவிகளை மறக்கச் சொல்லி எந்த இடத்திலாவது குறிப்பிடப்பட்டுள்ளதா என்ற கேள்வியினையும் சமூகத்துக்கு ஒரு கேள்வியாக தொடுத்தார் முன்னால் அமைச்சர் பசிர் சேகுதாவூத் அவர்கள்.
ஆகையால் பாலகுமாரின் உயிருக்காக குரல் கொடுப்பது எனது தார்மீகப் பொறுப்பாகும். அதனடிப்படையில் புதியதோர் நல்லாட்சி உறுவாக்கப்பட்டுள்ளது என்ற இந்த காலகட்டத்தில் அந்த முகாமில் இருக்கின்றார், இந்த முகாமில் இருக்கின்றார் என்ற கதைகள் எழுந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பாலகுமார் அண்ணனையும், அவருடைய மகன் சூரிய தீபனையும் என்னால் வெளியில் கொண்டுவர முடியுமாக இருந்தால் எனது பாராளுமன்ற பதவியைக் கூட தூக்கி எறிவதற்கு தான் தயாராக உள்ளதாக மிக உணர்ச்சி வசப்பட்டவாராக முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் செகுதாவூத் உரையாற்றினார். அவருடைய பிள்ளைகள் எனது பிள்ளைகளைப் போன்றவர்கள் என்றே நான் எப்போதும் நினைத்து வாழ்ந்து கொண்டிருப்பவன். ஆகவே எமது முஸ்லிம் சமூகம் இவ்வாறு நாங்கள் செய்கின்றோம் என பெருமைப்பட வேண்டும் அதனை தமிழ் சமூகம் அங்கீகரிக்கவும் வேண்டும்.
இவ்வாறு அன்மைக்காலமாக சிறீலங்க முஸ்லிம் காங்கிரசின் தேசிய தவிசாளர் பசீர் சேகுதாவூத் அவர்ளுக்கும் கட்சிக்கும் இடையில் முரன்பாடுகள் காணபடுவதாக பேசப்பட்டு வருகின்ற கருத்துக்களுக்கு பிற்பாடும் அவருடைய அரசியல் முன்னெடுப்புக்களில் ஓர் அமைதி நிலைமை காணப்படுவதற்கு பிற்பாடும் முதன் முதலாக பொதுமக்கள் மத்தியில் தோன்றி *இம்முறையும் பசீர் வெல்லுவாரு எப்படி என்று மேடையில் சொல்லுவாரு* என்ற தொனிப்பொருளில் இடம் பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவருடைய முழு உரையின் காணொளியினை எமது இணைய நாளிதல் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்துள்ளேன்
பசீர் சேகுதாவூத் அவர்களின் உரை பற்றிய எனது கருத்து…….
முன்னால் அமைச்சர் பசீர் சேகு தாவூத் அவர்களின் 35 வருடகால அரசியல் வாழ்க்கையில் 15 வருடங்கள் அவர் முஸ்லிம் காங்கிரசின் வளைர்ச்சிப் படியிலும், முஸ்லிம் காங்கிரசியில் இருந்து பலர் வேறு கட்சிகளுக்கு தங்களது அரசியல் சுயலாபங்களுக்காக வெளியேறிச்சென்ற போதும் கட்சியின் தலைமைக்கு பசீர் சேகுதாவூத் தோலோடு தோல் நின்று உதவியவர் என்ற ரீதியில் பார்க்குமிடத்து, இங்கு அவர் ஆற்றிய உரையானது அவருக்கும் கட்சிக்கும் ஓர் பாரிய பிரச்சனை இருப்பதாகவும், எதிர்காலத்தில் கட்சியானது பசீர் சேகுதாவூத் அவர்களை முழுமையாக புறக்கணித்தும் விடலாம் என்ற விடயமானது திரைக்குப் பின்னால் உள்ளதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
அந்த வகையில் இங்கு உரையாற்றிய பசீர் சேகுதாவூத் அவர்களின் உரையினை உற்று நோக்கும் போது ஈரோஸ் இயக்கமானது இலங்கை வாழ் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் இயக்கமாக ஆரம்ப காலத்தில் இருந்த வேலையில் பசீர் சேகுதாவூத் அவர்களுக்கு கிடைத்த அனுபவ ரீதியான அரசியல் சானக்கிய அறிவினை கண்ட முஸ்லிம் காங்கிரசின் இஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரஃப் அவர்களினால் கவர்ந்திலுக்கப்பட்டு முஸ்லிம் காங்கிரசில் இணைந்தற்கு பிற்பாடு அதன் வளர்ச்சியிலும், கட்சியானது எதிர்நோகிய அரசியல் தடைகளை எல்லாம் தாண்டி இன்றும் கிளைகளை விஸ்தரிக்கக் கூடிய மரமாக முஸ்லிம் காங்கிரஸ் காணப்படுவதற்கு பசிர் சேகுதாவூத் அவர்களின் பங்கு மிக முக்கிய காணப்பட்டதாக அவர் உரையில் இருந்து வெளிப்படுத்திய கருத்துக்களின் அடிப்படையிலும், தற்போது அவருக்கும் கட்சிக்கும் இருக்கின்ற அல்லது கட்சிக்குள் இருப்பவர்களின் கருத்து முரன்பாடுகள் காரணமாகவும், பிரதேச வாத அரசியல் சமகாலத்தில் பரவலாக முன்னெடுக்கப்படுவதனாலும் பசிர் சேகு தாவூத் அவர்கள் தனது எதிர்கால அரசியலில் முக்கிய முடிவினை எடுக்கத்தயாராகி உள்ளார் என்பது மறைமுகமாக சொல்லப்படும் விடயமாக அவருடைய உரையில் காணக்கூடியதாக இருகின்றது.
அந்த வகையில் தனது 25வருட பாராளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவ காலப்பபகுதியில் தான் தோற்றதில்லை என்ற நிதர்சனத்தின் அடிப்படையில் எதிர்காலத்திலும் தான் தோற்பதற்கு தயார் இல்லை என்பதனை முக்கிய கருப்பொருளாகக் கொண்டு தனது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக திட்டமிடப்படும் அரசியல் முன்னெடுப்புக்களுக்கு எதிராக எதிர்காலத்தில் தான் தமிழ் தேசியவாத அரசியலுடன் இணைந்து தனது அரசியல் நடவடிகைகளை அமைத்துக் கொள்ளலாம் என்ற முடிவினை அவர் எழுதிய தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான முதலமைச்சர் சம்பந்தமான கடிதத்துக்கும், பாலகுமாரினை விடுதலை செய்யுமாறு எழுதப்பட்ட கடிதத்துக்கும் விளக்கம் அளிக்கும் வகையில் அவர் ஆற்றிய உரையில் இருந்து மறைமுகமான கருத்தினை பெற்றுக் கொள்ளலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
எது எவ்வறாக இருந்தாலும் 25 வருடகால பாராளுமன்ற அரசியலில் தோல்வி அடைந்திராத அரசியல் சானக்கியம் உடைய தவிசாளர் பாசீர் சேகுதாவூத் அவர்கள் தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் எவ்வாறான முடிவினை எடுக்கப் போகின்றார் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)