பழுலுல்லாஹ் பர்ஹான்-
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் 164ஏ, 164பி, 164, 165ஏ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கான தேசிய அடையான அட்டைக்கான நடமாடும் சேவை இன்று 24-02-2015 செவ்வாய்க்கிழமை காத்தான்குடி-04, குபா பள்ளிவாயலில் இடம்பெற்றது.
காத்தான்குடி, உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் தலைமையில் இடம்பெற்ற இந் நடமாடும் சேவையில், தேசிய அடையாள அட்டைக்காக முதன்முறையாக விண்ணப்பித்தல், தேசிய அடையாள அட்டையைப் புதிப்பித்தலுக்காக விண்ணப்பித்தல், தொலைந்த அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தல் போன்ற சேவைகள் பொது மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தலின் போது பொலிஸ் முறைப்பாடு மற்றும் புகைப்படம் எடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்படி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நடமாடும் சேவையில் ஆண்கள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேற்படி நடமாடும் சேவையில் தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக பொது பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் தங்களது சேவைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)