மொனராகலை மக்தபு தாரில் குர்ஆனில் ஹகீம் மத்ரசாவின் 3 வது மாணவர் விடுகை விழா!

 எம்.ஏ. தாஜகான்-

மொனராகலை மாவட்டம் மெதகம பிரதேசத்தில் இயங்கி வரும் மக்தபு தாரில் குர்ஆனில் ஹகீம் மத்ரசாவின் 3 வது மாணவர் விடுகை விழாவும், பரிசளிப்பு விழாவும் இன்று(1) மத்ரசாவின் முன்றலில் நடை பெற்றது.

மத்ரசாவின் நிர்வாக சபைத் தலைவர் நசார்தீன் ஹாஜியாரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கண்டி கட்டுக்கல புர்க்கானியா அரபுக்கல்லூரியின் விரிவுரையாளர் மௌலவி அல்ஹாபிழ் எம்.டி.எம்.இக்ராம்(தீனி), சிறப்பதிதியாக அக்குரன பைத்துஸ் ஸகாத் நிதியத் தலைவர் மௌலவி முசம்மில் அஹ்மத்(மழாகிரி) மற்றும் மொனராகலை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் மௌலவி அல்ஹாஜ் எம்.எஸ்.எம். சன்சபீல்(ஸர்க்கி) அவர்களும் கலந்து மார்க்க சொற் பொழிவு நிகழ்த்தினார்கள். 

இந்நிகழ்வில் எட்டு மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறினர். 50 மாணவர்வர்களுக்கான சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கியமை குறிப்பிடத்தகது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -