அல் அக்ஸா தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி-2015

2015ஆம் கல்வி ஆண்டிற்கான இல்ல விளையாட்டு போட்டியின் நிகழ்வுகள் ஜனவரி மாதம் முதல் அல் அக்ஸா தேசிய பாடசாலையின் நடைபெற்று வந்தது. 

இந்த விளையாட்டு போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று (24.02.2015) செவ்வாய்க்கிழமை அதிபர் திருமதி ரோஸ் புஹாரி தலைமையில் பாடசாலை மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மின்­வலு சக்தி ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்­டார கலந்துகொண்டார். இவருடன் வடமேல் மாகாண சபை உறுப்புனர் S.H.Mநியாஸ், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான A.M. இன்பாஷ், A. அலாவுதீன்,  J.M. தாரிக், A.R.M பௌஷான், கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் M.H. மொஹம்மத் (உஹது) கல்பிட்டி கோட்ட கல்வி பணிப்பாளர் திரு .அனீஸ் முன்னாள் பணிப்பாளர் திரு. நூஹு லெப்பை, இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் மௌலவி யூசுப், இப்பாடசாலையின் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் உட் பலர் கலந்து சிறப்பித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர். 

இம்முறை மக்கா இல்லம் முதலிடத்தையும், ஜெருசலம் இல்லம் இரண்டாமிடத்தையும், மதீனா இல்லம் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டது.

அதிதிகளின் உரையைத் தொடர்ந்து புள்ளிகள் அறிவிக்கபட்டு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வினைத் தொடர்ந்து அனைவரினதும் மனதை தொட்ட இவ்விளையாட்டு போட்டி இனிதே சலவாத்துடன் நிறைவு பெற்றது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -