2013/2014ஆம் ஆண்டுகளில் தேசிய மற்றும் மாகாண ரீதியில் சாதனை படைத்த வீரர்களுக்கு பாராட்டு







அபூ-இன்சாப்-

ம்பாரை மாவட்டத்தின் கடந்த 2013/2014ஆம் ஆண்டுகளில் தேசிய மற்றும் மாகாண ரீதியில் சாதனை படைத்த வீரர்களுக்கு கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் விளையாட்டு வர்ணக் கௌரவிப்பு விழா இன்று (13) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டுக் கட்டித் தொகுதி மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் என்.மதிவண்னன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டுத்துறை அமைச்சின் உதவி செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அமைச்சின் உயர் அதிகாரிகள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், பயிற்றுவிற்பாளர்கள், விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், விளையாட்டு வீரர்களுக்கு சத்துணவுக்கான கசோலைகள், விளையாட்டு வீரர்களுக்கான சீருடைகள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பல்வேறு அன்பளிப்பு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -