பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு கைகொடுத்தவர்களை கெளரவிக்கும் விழா!

இர்ஸாத் ஜமால் (எம்.ஏ)-

பொத்துவில் ஆதார வைத்திய சாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வைத்தி சாலை அபிவிருத்தி சபை தலைவர் ஏ.எம் ரபீக் தலைமையில் பொத்துவில் பொது நூலக கேட்போர் கூடத்தில் 2015.01.29ம் திகதி வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.

பொத்துவில் முன்னால் நீதிமன்ற வலாகத்தினை வைத்திய சாலைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு உந்து சக்தியாக இருந்த முன்னால் நீதி அமைச்சர், ஸ்ரீ. மு.காங்கிரஸின் தலைவர் ரஊப்ஹகீம், பிரதேச சபை தவிசாலர் எம்.அப்துல் வாசித், வைத்திய சாலை புதிய காணியின் சுற்று மதில் அமைப்பதற்கு நிதி அன்பளிப்பு நல்கிய கிராம சேவகர் எம்.ஏ.சி. அஸீஸ் , வர்கதகர்கள், வைத்திய சாலை அபிவிருத்து சபை உறுப்பினர்களுக்குமான நன்றி நவிழல் விழா நடாத்துவதற்கு குறித்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
பொத்துவில் பிரதேசத்திற்கு எதிர்வரும் 31ம் திகதி வருகைதர இருக்கும் சுகாதார றாஜாங்க அமைச்சரும் ஸ்ரீ.மு. காங்கிரஸின் செயாலாளருமான எம்.பி.ஹஸன் அலி அவர்களிடம் பொத்துவில் ஆதார வைத்திய சாலையினை மத்திய அரசில் பதிவு செய்து தருவதற்கான கோறிக்கையினை முன்வைப்பதற்கும் குறித்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

பிரதேச சபை, கிராம சேவகர் எம்.ஏ.சி அஸீஸ், ஏ. புகாரி, தொழில் அதிபர் ஏ.ஆர்.எம். இஸ்ஹாக், குவாசி நீதிபதி எம்.ஐ.எம். ஷரீப், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஐ.எல் இல்முதீன், ஆப்தீன் போன்ற நலம் விரும்பிகள் வைத்திய சாலையின் சுற்றுமதிலை கட்டுவதற்கு முன்வந்துள்ளனர்.

பொத்துவில் வைத்திய சாலையின் அபிவிருத்திப் பணியில் இணைந்து கொள்ள விரும்புவோர் வைத்திய சாலை அபிவிருத்தி சபை தலைவர் ஏ.எம் ரபீக், செயலாளர் எஸ்.எம் தஸ்தகீர், பிரதேச சபை தவிசாலர் எம்.எஸ் அப்துல் வாசித் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு நிருவாகம் வேண்டிக்கொள்கின்றது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -