சாதனை படைத்தார் குமார் சங்கக்கார!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த வீரர் என்ற சாதனையை இலங்கை அணியின் குமார் சங்கக்காரா நிலை நாட்டியுள்ளார்.

ஒரு விக்கெட் காப்பாளர் என்ற ரீதியில் இந்த சாதனை நிலை நாட்டப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கொரி என்டர்ஸனின் பிடியை எடுத்ததன் மூலம் இந்த சாதனை சங்கக்காரா தனதாக்கிக் கொண்டார்.

37 வயதான சங்கக்காரா ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 473 பேரை ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார். இவற்றில் 377 பிடிகள் மற்றும் ஸ்டம்பிங் முறையிலான 96 ஆட்டமிழப்புக்களும் உள்ளடங்கும்.

இதற்கு முன்பு அவுஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் காப்பாளர் அடம் கில்கிறிஸ்ட்டின் சாதனையை சங்கக்காரா முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -