எப். அப்துல் குத்தூஸ்-
கடந்த 2014.12.15ம் திகதி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் அதாஉல்லா கலந்து கொள்ளும் முதலாவது பிரச்சார கூட்டம் அக்கரைப்பற்று அல் முனவ்வறா வீதியில் மாநாகர சபை உறுப்பினர் அஸ்மி மற்றும் ஜூனைதீன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஐம்பது(50) பிளாஸ்றிக் கதிரைகள் அக்கரைப்பற்று புதுப்பள்ளியிலிருந்து மேற்படி இரண்டு மாநாகர சபை உறுப்பினர்களால் அக்கூட்டத்திற்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது. அவை இதுவரை பள்ளிவாயலில் ஒப்படைக்கப்படவுமில்லை அதற்கான வாடகைப்பணமும் வழங்கப்படவில்லை என அறியமுடிகிறது.
இது தொடர்பாக பள்ளி அதிகாரி மேற்படி நபர்களை தொடர்பு கொண்டு கேட்டும் இதுவரை கதிரைகளை அவர்கள் ஒப்படைக்கவில்லை என முறையிடுகின்றார்.
தற்போது மைத்திரியின் நல்லாட்சி இடம் பெறுவதால் பள்ளியின் உடமைகளை உரியவர்கள் உடனடியாக பள்ளியில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்வதுடன் இவ்வாறான பல செயல்கள் கடந்த ஆட்சியில் இடம் பெற்றதாகவும் சுட்டி காட்டுகின்றனர்.
