அசாத் சாலி மற்றும் மொஹான் பீரிஸ் தொலைபேசி அழைப்புக்களை பரிசோதிக்க அனுமதி!

த்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி மற்றும் பிரதம நீதியரசராக செயற்பட்ட மொஹான் பீரிஸ் ஆகியோரின் தொலைபேசி அழைப்புக்களின் விபரங்களை பரிசோதிக்குமாறு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டியினால், காவற்துறையினருக்கு இந்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு, சட்டவிரோதமாக நுழைந்த அவர், இதுவரை பிரதம நீதியரசராக பதவி வகித்த மொஹான் பீரிசை அந்த பதவியிலிருந்து விலகுமாறு அச்சுறுத்தியதாக கறுவாத்தோட்ட காவற்துறையினரிடம் செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டை அடுத்தே இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முதலில், பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு சென்ற மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி, பிரதம நீதியரசராக இதுவரை செயற்பட்ட மொஹான் பீரிசை சந்தித்துள்ளதாக கறுவாத்தோட்ட காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மாகாண சபை உறுப்பினர், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் நீதிமன்றில் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இந்தநிலையில், குறித்த தொலைபேசி அழைப்புக்களின் விபரங்களை பரிசோதிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -