பழுலுல்லாஹ் பர்ஹான்-
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன கூட்டு ஸகாத் நிதியத்தினால் சுமார் 20 இலட்சம் ரூபாய் ஸகாத் நிதியிலிருந்து 2014ம் ஆண்டிற்குரிய 182 ஸகாத் பயனாளிகளுக்கு தொழிலுதவி,கடன் நிவாரணம் ,வாழ்வாதார உதவி போன்ற ஸகாத் உதவி வழங்கும் நிகழ்வு 28-01-2015 இன்று புதன்கிழமை மாலை காத்தான்குடி சம்மேளனத்தின் அஷ்ஷஹீத் அல்ஹாஜ் ஏ அஹமது லெவ்வை ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன கூட்டு ஸகாத் நிதியத்தின் தலைவரும்,தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறபு இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியுமான அஷ்ஷெய்க் ஏ.எம்.அலியார் (றியாதி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.சுபைர், சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத், மட்டக்களப்பு ,காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைகளின் தலைவரும்,காதி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) ,கூட்டு ஸகாத் நிதியத்தின் பிரதித் தலைவர் எம்.ரி.எம்.ஹாலித் ஜேபி , காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி எம்.எச்.எம்.புகாரி (பலாஹி), சம்மேளனத்தின் உப தலைவர்களில் ஒருவரான மர்சூக் அஹமட் லெவ்வை,கூட்டு ஸகாத் நிதியத்தின் செயலாளர் ஏ.எம்.சாதிக்கீன் ,ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் விரிவுரையாளர் மௌலவி எம்.பீ.எம்.பாஹிம் (பலாஹி) உட்பட பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது அதிதிகளினால் 2014 ஆண்டிற்குரிய 182 ஸகாத் பயனாளிகளுக்கு தொழிலுதவி,கடன் நிவாரணம் ,வாழ்வாதார உதவி போன்ற ஸகாத் உதவி வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு 2014 ஆண்டிற்குரிய 20 இலட்சம் ரூபாய் ஸகாத் நிதியிலிருந்து 182 ஸகாத் பயனாளிகளில் 84 பேருக்கு தொழில் உதவியாக தையல் இயந்திரம்,மா அரைக்கும்இயந்திரம்,துவிச்சக்கரவண்டி,இடியப்பம்,அப்பம் தயாரிப்பதற்கான உபகரணங்கள்,கடற் தொழில் உபகரணங்கள்,சில்லறை கடை வைப்பதற்கான உபகரணங்கள் ஏனையவர்களுக்கு அவர்களின் தொழிலுக்கு ஏற்ப 25000 ரூபாய் வழங்கி வைக்கப்பட்டதாகவும் கடன் நிவாரணமாக 15000 ரூபாய் வீதம் 49 பேருக்கு வழங்கப்பட்டதாகவும் வாழ்வாதார உதவியாக 10000 ரூபாய் வீதம் 49 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டதாகவும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன கூட்டு ஸகாத் நிதியத்தின் இணைப்பாளர் என்.எம்.எம்.றம்ஸீன் (நளீமி) தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)