சர்வதிகார ஆட்சிக்கெதிராக எவ்வாறு எமது வாக்குரிமையை பயன்படுத்தினோமோ,அவ்வாறே எதிர்வரும் பொதுத்தேர்தலில் எமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வதிலும் சிந்தித்து செயற்பட வேண்டும். முடிந்த ஜனாதிபதித் தேர்தலோடு சுயநல அரசியல்வாதிகள் ஓரங்கட்டப்பட்டுள்ள நிலையில் சில அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் இருப்புக்காகவும்,சுயநலத்துக்காகவும் அரசோடு ஒட்டியுள்ளனர். தத்தமது பிராந்திய அரசியல்வாதிகளின் அண்மைக்கால செயற்பாடுகளை மிகவும் உண்ணிப்பாக பார்த்திருப்போம்,எனவே இம்முறை மிகவும் பொருத்தமான ஆளுமைமிக்கவர்களையே தெரிவு செய்ய வேண்டிய தேவையுள்ளது.
இவ் ஜனநாயக நாட்டில் உரிமை அரசியலையே நாம் பிரதானமாக எதிர்பார்க்கிறோம். உரிமை அரசியல் சரியாகக் கிடைக்குமிடத்து,அபிவிருத்தி அரசியல் தானாகவே நடைபெறும். இப்புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் பெரும்பாலான அமைச்சுப் பொறுப்புக்கள் ஐ.தே.கட்சிக்கே வழங்கப்பட்டுள்ளது. இதன் பொறுப்புக்களை 100 நாட்களினுள் முடியுமான வரை மிகவும் காத்திரமாக, உற்சாகத்துடன் செய்து முடிப்பார்கள் என்ற அபிப்பிராயம் நிலவுகின்றது.

10 வருடங்களின் பின் கிடைத்த இவ்வாய்ப்பை மிகவும் உச்சமாகப்பயன்படுத்தி எதிர்வரும் பொதுத் தேர்லை ஐ.தே.கட்சியினர் முகம் கொடுப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது முஸ்லிம் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட அ மைச்சுப் பொறுப்புக்களை இந் 100 நாட்களினுல் அவர்கள் எவ்வாறு பயன்படுத்துவார்கள் என்பதையே.. வட மாகாண முஸ்லிம்களைப் பொறுத்தவரை அங்கு அமைச்சர் றிசாட்டின் உதவி, பங்களிப்பு மிகவும் அவசியமாகவே உள்ளது.

தற்போது அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களைப் பயன்படுத்தி அவர் மேலும் பல உதவிகளை வட மாகாண முஸ்லிம்கள் மத்தியில் முன்னெடுப்பார் என்பதில் ஐயமில்லை.
எனினும் கிழக்கில் இவரின் செல்வாக்கு கேள்விக்குறியே!!
முஸ்லிம் மக்கள் அனைவரும் மிகவும் உன்னிப்பாக அவதானிப்பது மு.காங்கிரஸின் போக்கையும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பொறுப்புக்களை எவ்வாறு பயன்படுத்த உள்ளார்கள் என்பதையுமே.
முஸ்லிம் மக்கள் அனைவரும் மிகவும் உன்னிப்பாக அவதானிப்பது மு.காங்கிரஸின் போக்கையும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பொறுப்புக்களை எவ்வாறு பயன்படுத்த உள்ளார்கள் என்பதையுமே.
ஏனெனில இலங்கை வாழ் முஸ்லிம்களின் தாய்க்கட்சி முஸ்லிம் காங்கிரஸ் என்றால் அது மிகையாகாது. இக்கட்சி மூலம் அபிவிருத்தியை விட, உரிமைக்கான பிரதிபலிப்பையே முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே கடந்தகால அரசாங்கம் இழைத்த அநீதிகளுக்கு இந் 100 நாட்களினுள் இவர்கள் உரிய நிவாரத்தினை பெற்றுக்கொடுக்க வேண்டும். அத்துடன் இவ் 100 நாட்களுக்குள் ஐ.தே.கட்சி அமைச்சர்களும்,பிற அமைச்சர்களும் முழு மூச்சாக வேலை செய்ய ஆயத்தமாக உள்ள இத்தருணத்தில், இவர்களை விட எமது முஸ்லிம் அமைச்சர்கள் வேலை செய்ய ஆயத்தமாக வேண்டும். ஏனெனில் இந்நாட்டில் எமக்கான உரிமை,இருப்பு,பாதுகாப்பு,அபிவிருத்தி என்பவற்றில் இந் 100 நாட்களில் மிகவும் அவதானம் செலுத்துவது இவர்களின் தார்மீக பொறுப்பாகும்...
பொத்துவில் எம்.ஏ,ஜெஸ்வத்,
Faculty of Animal Science,
விலங்கு விஞ்ஞான பீடம்
Uva Wellassa University.
பொத்துவில் எம்.ஏ,ஜெஸ்வத்,
Faculty of Animal Science,
விலங்கு விஞ்ஞான பீடம்
Uva Wellassa University.