மஹிந்தவின் மகன் என் மகனை தாக்கினார்- மேர்வின் சில்வா!

னது மகன் மாலக்க சில்வா இரு தடவைகள் தாக்கப்பட்ட சம்பவங்களின் பின்னணியிலும் முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோசித ராஜபக்சவே இருப்பதாக அண்மைக்காலமாக தெரிவித்து வரும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா அதற்கான மேலதிக விளக்கமளித்துள்ளார்.

இரண்டாவது தடவை தனது மகன் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதற்கான காரணம், யோசிதவின் மெய் பாதுகாப்பாளர் ஒருவருக்கு தனது மகன் அறிவுரை வழங்கச் சென்றது எனவும், சம்பவம் பற்றி இறுதி நேரத்திலேயே ஜனாதிபதி கேள்விப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து தாக்கப்பட்டு கொழும்பு நவலோக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாலக சில்வாவை அடுத்த 45 நிமிடங்களுக்குள் ஜனாதிபதி நேரடியாக வந்து பார்வையிட்டதாகவும் அதேவேளை வைத்தியசாலைக் கட்டணத்தைத் தான் செலுத்தச் சென்ற போது அதனை வைத்தியசாலை நிர்வாகம் ஏற்கவும் மறுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரவு கேளிக்கை விடுதியொன்றிலேயே இரண்டாவது தாக்குதல் இடம்பெற்றமையும் அதில் வெளிநாட்டுப் பெண் ஒருவரோடு மாலக சில்வா முறைகேடாக நடக்க முற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்த அதேவேளை ஆரம்பத்தில் தனது மகன் திட்டமிட்டு தாக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்த மேர்வின் சில்வா பின்னர் தனது மகனும் நீதியான முறையில் சிறையிலடைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் காலத்தில் தெரிவித்திருந்தமையும் அண்மையில் பசில் மற்றும் கோத்தபாயவுக்கு எதிராக முறைப்பாட்டைப் பதிவு செய்தபின் தனது மகனை அடைத்து வைத்து தான் கட்சியை விட்டு வெளியேறுவதை தடுத்திருந்ததாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -