பி.எம்.எம்.ஏ.காதர்-
கல்வி மேம்பாட்டுக்கான சமூக அமைப்பின் ஏற்பாட்டில் (AFEDS) 2013ம்,2014ம் கல்வியாண்டிற்கு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மருதமுனைப் பிரதேச மாணவர்களை கௌரவித்து நினைவுச் சின்னம் வழங்கிய நிகழ்வு அண்மையில் (24-01-2015) மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி ஆரம்பப்பிரிவில் நடைபெற்றது.
கல்வி மேம்பாட்டுக்கான சமூக அமைப்பின் தலைவர் எம்.ஏ.ஏ.ஆபித் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைப்பின் செயலாளர் எம்.என்.எம்.நாஜித்,பொருளாளர் ஏ.எல்.ஏ.பாஸித் ஆகியோருடன் அமைப்பின் உயர்பீட உருப்பினர்கள் மற்றும் நிருவாக சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு 24 மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தனர்.
கடந்த ஆண்டில் இருந்து கிழக்கில் பல்வேறுபட்ட சமூக சேவைகளை இந்த கல்வி மேம்பாட்டுக்கான சமூக அமைப்பு செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
