பதவியை இராஜினாமா செய்த பொதுச்செயலாளர் திஸ்ஸ எம்மோடு இணைந்துவிட்டார்- ஜனாதிபதி அறிவிப்பு

க்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றின் போதே கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் திஸ்ஸ அத்தநாயக்க தன்னுடைய இராஜினாமாக் கடிதத்தைக் கையளித்துள்ளார்.

இதனிடையே, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ள திஸ்ஸ அத்தநாயக்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டார் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார், அவருக்கு சுகாதார அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :