அம்பாரை மாவட்டத்தில் மழை நின்றதால் அன்றாட நடவடிக்கைகள் ஆரம்பம்

சுலைமான் றாபி-

சுமார் ஒரு மாதகாலமாக நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் தொடர்ச்சியாக பெய்த அடை மழை அதன் மூலம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகள் காரணமாக மக்களின் அன்றாட வாழ்வாதார நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது கிழக்கில் சூரியன் பிரகாசிக்கத் துவங்கியதிலிருந்து போக்குவரத்துக்கள் சீராக இடம்பெறுவதோடு, மக்களின் இயல்பு நிலைகள் வழமைக்கு திரும்பியிருக்கிறது. இதனால் அன்றாடம் கூலித்தொழில் செய்பவர்களும், சுயதொழிலில் ஈடுபடுபவர்களும் தங்களின் தொழில் சார்பான நடவடிக்கைகளில் பெரிதும் ஆர்வம் செலுத்தி வருவதோடு, சந்தைகளிலும் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வத்துடன் செயற்படுகின்றனர்.

மேலும் அம்பாறை மாவட்டத்தில் நிலவும் சீரான காலநிலையினால் வீடுகளிலும், வீதிகளிலும் தேங்கி நின்ற வெள்ளநீர் வற்றுவதையும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உறவினர்கள் வீடுகளிலும், தற்காலிக முகாம்களிலும் தங்கியிருந்த மக்கள் தங்கள் சொந்த இடங்களை நாடிச்செல்வதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த சீரான காலநிலையினால் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நேற்றிலிருந்து சூடு பிடிக்கத்துவங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -