வேட்பு மனு தாக்கல் நிறைவு(முழு விபரம் இணைப்பு)

லங்கையின் 7வது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முற்பகல் 9 மணிக்கு ஆரம்பமாகி முற்பகல் 11 மணிக்கு நிறைவு பெற்றது.கட்டுப்பணம் செலுத்திய 17 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், 2 சுயாதீன வேட்பாளர்களுமாக மொத்தம் 19 உறுப்பினர்கள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளர்.

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மு
பிற்பகல் 10.05 அளவில் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ 
தமது வேட்பு மனுவை 10.48 அளவில் தாக்கல் செய்தார்.

இதனை தவிர, ஐக்கிய கட்சி கட்சியின் சார்பில் சிறிதுங்க ஜயசூரிய, முன்னிலை சோசலிச கட்சியின் சார்பில் துமிந்த நாகமுவ, அனைவரும் பிரஜைகள் அனைவரும் மன்னர்கள் கட்சியின் சார்பில் எம்.பீ. தம்ணிமுல்ல, ஜனநாயக முன்னிலை கட்சியின் சார்பில் பாலி விஜேவர்தன, ஐக்கிய இலங்கை மக்கள் கட்சியின் சார்பில் ஜயந்த குலத்துங்க, இலங்கை தேசிய முன்னணி சார்பில் விமல் கிகனகே, ஐக்கிய சமாதான முன்னணி சார்பில் இப்ராஹிம் மொஹமட் மிப்லால் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அத்துடன், இலங்கை தொழிலாளர் கட்சியின் சார்பில் ஏ.எஸ்.பி லியனகே, புதிய சோசலிச கட்சியின் சார்பில் சுந்தரம் மஹேந்திரன், ஜனநாயக தேசிய இயக்கத்தின் கடுகம்பல அப்புஹாமிலாகே பிரசன்ன பிரியங்கர, எங்கள் தேசிய முன்னணி சார்பில் நாமல் அஜித் ராஜபக்ஸ, மக்கள் படை முன்னணி சார்பில் பத்தரமுல்ல சீலரத்தன தேரர், தேசப்பிரேமி ஐhதிக முன்னணியின் சார்பில் ரத்னாயக்க ஆராச்சிகே சிறிசேன, புதிய சிஹல உறுமய சார்பில் சரத் மனமேந்திரா, ஐக்கிய இலங்கை மக்கள் கட்சியின் சார்பில் ருவன்திலக போதுருவாராச்சி ஆகியோரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
அது போல் சுயாதீன வேட்பாளராக ஐ.எம் இல்லியாஸ் மற்றும் ஷமிந்த அனுருத்த பொல்கம்பொல ஆகியோரும் 2015ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி வேட்பாளருக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்பு மனு ஏற்பிற்கு பின்னர் கருத்து வெளியிட்ட தேர்தல்கள் ஆணையாளர் இரண்டு வேட்;பாளருக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராகவும், பொது வேட்பாளருக்கு மைத்திரிப்பால சிறிசேனவுக்கு எதிராகவுமே இவ்வாறு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக நவசமசமாஜ கட்சியின் செயலாளர் விக்ரமபாகு கருணாரத்னவும், பொது வேட்பாளர் மைத்திரிபால சிசேனவுக்கு எதிராக ஐக்கிய இலங்கை பொது சபை கட்சியின் செயலாளர் நாத் அமரகோனும் இவ்வாறு ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.

எனினும் இதனை நிராகரிப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

வேட்பு மனு தாக்கலின் பின்னர் அமைதியான தேர்தலின் பொருட்டு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய வேட்பாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :