"தேர்தல் நெருங்கிவரும் சமயம் அரசு முஸ்­லிம்­க­ளுக்கு சாத­க­மான முடி­வு"

னா­தி­பதி தேர்தல் நடை­பெ­ற­வி­ருக்கும் இவ்­வே­ளையில், கிழக்கு மாகா­ணத்தில் முஸ்­லிம்­களின் பொது­வான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­பது தொடர்பில் அர­சாங்கம் தனது கவ­னத்தை திருப்­பி­யுள்­ளதை காண­மு­டி­வ­தாக பி.பி.சி. செய்தி வெளி­யிட்­டுள்­ளது. அச் செய்­தி யில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

குறிப்­பாக காணி, வாழ்­வா­தாரம் மற்றும் மத வழி­பாட்டு உரிமை தொடர்­பான பிரச்­சி­னை கள் தொடர்பில் சாத­க­மான முடி­வுகள் சில தமக்கு கிடைத்­துள்­ள­தாக முஸ்­லிம்கள் தெரி­விக்­கின்­றார்கள். அண்­மையில் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­தாபய ராஜ­பக்‌­ஷ­விற்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலை­மை­யி­லான சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டையில் பாது­காப்பு அமைச்சில் சந்­திப்­பொன்று இடம்­பெற்­றது.

இந்த சந்­திப்­பை­ய­டுத்து பாது­காப்பு அமைச் சின் செய­லா­ளரால் பிறப்­பிக்­கப்­பட்ட உத்­த­ர வின் பேரில் திரு­கோ­ண­மலை

உயர்­பா­து­காப்பு வல­ய­மொன்­றி­லுள்ள கரு­ம­லை­யுற்று பள்­ளி­வாசல் தற்­போது விடு­விக்­கப்­பட்டு இரா­ணு­வத்­தினால் பள்ளி வாசல் நிர்­வா­கத்­திடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாக கிழக்கு மாகாண சபை உறுப்­பி­ன­ரான மொகமட் ரம்ழான் அன்வர் கூறு­கின்றார்.

இந்த பள்­ளி­வா­சலை விடு­விப்­ப­தற்­காக கிழக்கு மாகாண சபை ஊடாக இரு வரு­டங்­க­ளுக்கு மேலாக முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டும் அது கை கூடாமல் போன­தா­கவும் அவர் தெரி­விக்­கின்றார்.

அந்த பகு­தியில் கரை­வலை மீன­வர்கள் கடற்­றொ­ழிலில் ஈடு­ப­டு­வ­தற்கு ஏற்­க­னவே விதிக்­கப்­பட்­டி­ருந்த கட்­டுப்­பா­டு­களும் தற்­போது நீக்­கப்­பட்­டுள்­ளது.

அம்­பாரை மாவட்­டத்தில் ஒலுவில் வெளிச்­ச­வீட்டு அரு­கா­மையில் கடந்த சில வரு­டங்­க­ளாக அமைந்­தி­ருந்த கடற்­படை முகாமும் வாபஸ் பெறப்­பட்­டுள்­ளது என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.

குறிப்­பாக புல்­மோட்டை பிர­தே­சத்தில் காணி தொடா­பான பிரச்­சி­னைக்கும் தீர்வு கிடைக்கக் கூடிய அறி­கு­றிகள் தென்­ப­டு­வ­தாவும் ரம்ழான் அன்வர் குறிப்­பிட்டார்.

கடந்த 4- 5 வரு­டங்­க­ளாக முஸ்­லிம்­களால் முன்­வைக்­கப்­பட்ட இந்த பிரச்­சி­னைகள் தொடர்பில் அர­சாங்கம் ஏற்­க­னவே கவனம் செலுத்­த­வில்லை என்றும், தற்­போது ஜனா­தி­பதி தேர்­தலில் முஸ்­லிம்­களின் வாக்­கு­களை பெறு­வ­தற்­கான முயற்­சி­யா­கவே இவை தற்­போது நிறை­வேற்­றப்­ப­டு­வ­தா­கவும் பிர­தான எதிர்­கட்­சி­யான ஐக்­கிய தேசிய கட்சி குற்­றஞ்­சாட்­டு­கி­றது.

ஆனால் இந்த முயற்­சி­யா­னது அவர்களது எதிர்பார்க்கும் பலனை கொடுக்கமாட்டாது என்றும், கிழக்கு மாகாண முஸ்லிம்களை பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள் என்றும் அக்கட்சியை சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினரான மொகமட் மஹ்ருப் இம்ரான் குறிப்பிடுகின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -