அம்பாறை நகரில் அகற்றப்படும் சுவரொட்டிகளும், பதாதைகளும்....!

ஜனா­தி­பதி தேர்­தலை முன்­னிட்டு அம்­பாறை நக­ரிலும் புற­நகர் பகு­தி­க­ளிலும் உள்ள பதா­தைகள், சுவ­ரொட்­டிகள் என்­ப­வற்றை அகற்றும் பணிகள் தற்­போது இடம்­பெற்று வரு­கின்­றன. கடந்த 3 தினங்­க­ளாக இந்­ந­ட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள அம்­பாறை நகர சபை பிர­தே­சங்கள் அண்­மைக்­கா­ல­மாக ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆத­ரவு தெரி­விக்கும் பதா­தை­க­ளாலும் நீல நிற கொடி­க­ளாலும் அலங்­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­தன. எனினும் அம்­பாறை பொலிஸார் அம்­பாறை நகர சபைத்­த­லைவர் இந்­திக நளி­னுடன் நடத்­தப்­பட்ட பேச்­சு­வார்த்­தை­யை­ய­டுத்து அம்­பாறை நகர சபையால் போடப்­பட்­டி­ருந்த பதாதைகள் தற்­போது அகற்­றப்­பட்டு வரு­கின்­றன.

தேர்­தல்கள் ஆணை­யாளர் சகல பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கும் விடுத்­துள்ள வேண்­டு­கோளின் பேரி­லேயே இவை அகற்­றப்­பட்டு வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

மேலும் இவ்­வி­டயம் தொடர்­பாக கருத்து தெரி­வித்த அம்­பாறை நகர சபையின் தலைவர் இந்­தி­க­ நளின் நாட்டின் சட்ட திட்­டங்­களை மதித்து செயற்­படும் நோக்­கு­ட­னேயே எமது நகர சபை ஊழி­யர்­களைக் கொண்டே நாம் எமது ஜனா­தி­ப­தியின் பதாதைக­ளையும் சுவ­ரொட்­டி­க­ளையும் முதலில் அகற்­றி­யுள்ளோம். தொடர்ந்து ஏனைய பதா­தைகளும் அகற்­றப்­படும். எமது செயற்பாட்டைக் கருத்திற்கொண்டு ஏனைய நகர மற்றும் பிரதேச சபையினரும் நாட்டின் சட்டத்தை மதித்து செயற்பட வேண்டுமெனவும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -