நேற்று சனிக்கிழமை இரவு லண்டன் பீ.பீ.சி வானொலியில் சந்தேசிய சிங்கள சேவைக்கு ஸ்ரீ.லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் பேட்டியின் போது –
சந்தேசிய சிங்கள செய்தியாளர்
கேள்வி - ஜனாதிபதித் தேர்தலின்போது உங்களது கட்சி யாருக்கு ஆதரவு தெரிவிப்பாதாக உத்தேசித்துள்ளீர்கள் ?
தலைவர் ரவுப் ஹக்கீம்
தலைவர் ரவுப் ஹக்கீம்
பதில் - அரசிடமிருந்து ஒரு தீர்க்கமான உறுதிபாட்டையே எதிர்பார்த்து இருக்கின்றோம்.
நாங்கள் அரசாங்கத்துடன் நடாத்திய பேச்சுவார்த்தையின்போது எமது சமுகம் சார்ந்த எந்தவொரு அனுகூலமும் இன்னும தீர்க்கமானதொரு முடிவும் அரசிடமிருந்து எமக்கு கிட்டவில்லை. நேற்றுமுன்தினமும் அமைச்சர் பசில் ராஜபக்சவுடமும் பேசியுள்ளோம்.
நாங்கள் அரசாங்கத்துடன் நடாத்திய பேச்சுவார்த்தையின்போது எமது சமுகம் சார்ந்த எந்தவொரு அனுகூலமும் இன்னும தீர்க்கமானதொரு முடிவும் அரசிடமிருந்து எமக்கு கிட்டவில்லை. நேற்றுமுன்தினமும் அமைச்சர் பசில் ராஜபக்சவுடமும் பேசியுள்ளோம்.
கடந்த வெள்ளிக்கிழமையும் எமது கட்சியின் மக்கள் பிரதிநிதிகளான எம்.பீக்கள், மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி உறுப்பினர்கள் எமது மேற்படி விடயமாக நாங்கள் ஒன்று கூடி ஆராய்ந்துள்ளோம்.
கடந்த காலங்களிலும் எமது சமூகம் சார்ந்த எந்தவொரு அனுகூலமும் எங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை. இதனால் எமது மக்கள் இந்த அரசுபற்றி மிகவும் மாறுபட்ட மனோநிலையில் உள்ளனர். மேலும் ஒரு இரு நாற்களில் நாங்கள் ஒரு தீர்க்கமான முடிபை எடுப்போம்.
மாகாசபைகளுக்குரிய சகல அதிகாரத்தையும் வழங்கவேண்டும். அதனை நீக்க எமது கட்சி விடமாட்டோம். என ஹக்கீம் தெரிவித்தார்.
ஆனால் மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்கள் - சமுகம் சார்ந்த அனுகூலம் மட்டுமல்ல இந்த நாட்டில் உள்ள சிறுபாண்மைக் கட்சிகளுக்கே ஒரு வரப்பிரதசமாக அவருடைய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலின் ஒன்றின்போது – ஆர்.பிரேமதாசவுக்கும் - சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்குமிடையிலான ஜனாதிபதி தேர்தலின்போது ஆர்.பிரேமதாசவிடம் சென்று தலைவர் அஸ்ரப் அவர்கள்
இந்த நாட்டில் ஜெஆர்.ஜெயவர்த்தன கொண்டுவந்த அரசியல் அமைப்பில் - சிறுபாண்மைக் கட்சிகள் ஒரு தேர்தலில் 12.5 விகிதாசாரத்தில் வாக்குகள் எடுத்தல் வேண்டும். இதனை 4.5ஆக குறைப்பதற்கு 24 மணித்தியாலயத்திற்குள் வர்த்தமாணியில் அறிவிக்கும்படி கேட்டிருந்தார்.
அதனை உடன் ஆர்.பிரேமதாசா அமுல்படுத்தினார். இதனை இன்றும் இந்த நாட்டின் உள்ள சகல சிறுபாண்மை மக்களும,; சிறுகட்சிகளும் அந்த அனுகூலத்தை அனுபவிக்கின்றனர்.
தலைவர் ஹக்கீம் கூட 24 மணித்தியாலயத்திற்குள் மாகாணசபையின் 13ஆவது சர்த்தை பொலிஸ், காணி, நீதி அதிகாரம் மாகாணசபைக்கு வழங்கல் வேண்டும். அல்லது பொலிஸ்,நீதி,தேர்தல், பொதுநிருவாக, கொமிசனை வர்த்தமாணியில் அறிவிக்கும்படி ஜனாதிபதியை கேட்டிருக்க வேண்டும்.
.jpg)
0 comments :
Post a Comment