வேட்புமனுத் தாக்கலினால் நாளை இராஜகிரியவில் 2000 பொலிஸார் கடமையில்!

நாளை (08) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணிவரை இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலக அலுவலகத்தை சூழவுள்ள பகுதியில் விஷேட வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வேட்புமனுத் தாக்கல் செய்யப்படவுள்ளமையே இதற்குக் காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். 

மேலும் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதற்காக 2000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 

அத்துடன் வேட்பு மனுத் தாக்கல் செய்ய பேரணியாக செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :