பெற்றோர்கள் தங்கள் வீடுகளில் TV வாங்குவதை விட கணணிகளை வாங்கி வைப்பது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார். அண்மையில்(19) நிந்தவூரில் கணணி பயிற்சிநெறியை பயிலும் College of Modern Technology மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் ;
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடைய கல்விகளில் ஊக்கமுடையோர்களாக இருப்பாளர்களாயின் அதில் அவர்களை ஊக்குவித்து அவர்களின் கல்வி வளர்ச்சியில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும். பிள்ளைகளின் கல்வி என்பது ஒரு முதலீடு அதில் பெற்றோர்களின் ஊக்குவிப்பு என்பது அவர்களின் வியாபாரத்திற்கு செய்யும் ஒரு முதலீடாகும். எனவே அவர்களை கல்வியில் சிறந்து விளங்கக் கூடியவர்களாக மாற்றும் போது இறுதியில் அதன் அறுவடையில் அதிக இலாபங்களை ஈட்டிக் கொள்ள வழிசமைக்கும்.
தற்கால நவீன யுகத்தில் ஆங்கில அறிவும் அதனுடன் இணைந்ததான கணணி அறிவும் அசூர வேகத்தில் வளர்ச்சியடைந்து கொண்டு செல்வதனால் மாணவர்களின் தேடல் திறமைகள் நாளுக்கு நாள் விரிசல் அடைந்து கொண்டு செல்கின்றது. இதனாலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் அரசாங்கத்தின் கீழ் நெனசல அறிவகங்கள் நிறுவப்பட்டு ஒவ்வொரு பிரதேசங்கள் தோறும் கணணி அறிவு பரவலாக்கப்பட்டுள்ளது. தற்போது எமது பெற்றோர்கள் அந்த விடயத்தில் கூடுதல் கரிசனை எடுத்திருப்பது போல் ஆங்கில அறிவுக் கல்வியிலும் கூடுதல் கரிசனை எடுக்க வேண்டிய தேவை உள்ளது.
உலகின் ஜன்னல் என அழைக்கப்படும் ஆங்கில மொழியைத்தெரிந்தால்தான் உலகினை பார்க்க முடியும் இதில் சர்வதேசம் என்ன கூறுகின்றது, சர்வதேசம் எந்த துறையில் முன்னேறிக் கொண்டிருக்கின்றது, எந்த துறையை நாம் தெரிவு செய்தால் சர்வதேசத்தில் ஒரு பிரஜையாக உயர முடியும் போன்ற விடயங்களை அறிவதற்கு இந்த ஆங்கில அறிவு அத்தியாவசியமாக காணப்படுகிறது.மேலும் அதனுடன் கணணி அறிவும் சேர்மானப் பொருளாக இணைந்தபடியினால் அதுவும் ஆங்கில அறிவினைப் பிரதியீடு செய்து ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமாகக் காணப்படுகிறது. எனவே இவை இரண்டும் முடிவிலியாக நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து கொண்டு செல்வதினால் இந்த விடயங்களில் மாணவர்கள் தங்கள் அறிவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment