“ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் மனக்குறைகளைப் போக்கக்கூடிய பொதுவான ஒரு வேட்பாளருக்கு ஆதரவளிக்கவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராக உள்ளது. அரசாங்கத்துக்கு ஆதரவளிக்காது” – இப்படித் தெரிவித்திருக்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி. கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைக் கூறினார். என்று ஊடகங்களில் வெளிவந்த செய்தியையடுத்து இம்போட் மிரர் செய்திப்பிரிவு கட்சியின் செயலாளர் ஹஸன் அலியை தொடர்புகொண்டு கேட்டபோது;
எந்த கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றோ அரசுக்கு ஆதரவளிக்க முடியாது என்றோ இதுவரை நாங்கள் முடிவு செய்யாத நிலையில் ஊடகங்களில் வெளிவந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்று முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் தெரிவித்தார்
அவர் மேலும் கூறுகையில் இந்த செய்தி ஒரு சில கட்சியினரால் முடிவெடுக்கபட்டு முஸ்லிம் மக்களிடம் ஓர் பிரச்சினையை உண்டாக்குவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர்.
இந்த குழப்பவாதிகளின் செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி நீண்ட மசூராவின் பின்னரே எந்த தீர்மானங்களும் எடுக்கப்படும் அதுவரை வெளிவரும் வதந்திகளை நம்பவேண்டாம் என்று இம்போட்மிரருக்கு கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி தெரிவித்தார்.

0 comments :
Post a Comment