பி. முஹாஜிரீன்-
சிறுவர்களை பாதுகாப்பது நாட்டில் வாழும் ஒவ்வொருவரினதும் கடமையாகும் என பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தின் அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான் தெரிவித்தார்.
பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் சிறுவர் பாதுகாப்புக் குழு அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று (11) செவ்வாய்க்கிழமை அட்;டாளைச்சேனை பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் எச்.எல். இஸ்பானா தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து பாலமுனை அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான் உரையாற்றுகையில், அரசாங்கம் சிறுவர்களின் உரிமையைப் பாதுகாப்பதற்காகவும் சிறுவர்களுக்கு ஏற்படுகின்ற துஷ்பிரயோகங்கள,; துன்புறுத்தல்கள் போன்றவற்றைத் தடுக்கும்பொருட்டு ஒரு வலுவான சட்டத்தை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதன் காரணமாக எமது பிரதேசங்களில் சிறுவர்களுக்கு ஏற்படுகின்ற துன்பறுத்தல்கள் சிறுவர் துஷ்பிரயோகங்கள் போன்றவை குறைந்தளவிலேயே காணப்படுகின்றன.
கிராமங்கள் தோறும் சிறுவர்களைப் பாதுகாப்பதற்காகவும் அவர்களுக்கான உரிமையை வழங்குவதற்காகவும் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்கொண்டு செல்வது பாராட்டுக்குரிய விடயமாகும். எதிர்காலத்தில் சிறந்த சந்ததிகளை உருவாக்குவதற்கு நாம் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றார்.
இந்நிகழ்வில் சிறுவர்பாதுகாப்பு உத்தியோகத்தர் எச்.றிபாஸ், உளவளத் துணையாளர் ஏ.மனாஸ், கிராம சேவை உத்தியோகத்தர் எம்.பர்வின், பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் பி. முஹாஜிரீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment