சரத் பொன்சேகாவுக்கு ஏற்பட்ட நிலைமை போல் பொது வேட்பாளராக களமிறங்க உள்ளவருக்கும் ஏற்படும்-விமல்

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஏற்பட்ட நிலைமை, தற்போதைய தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக களமிறங்க உள்ளவருக்கும் ஏற்படும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது எதிர்கட்சித் தலைவர் பதவியை தக்க வைத்துகொள்வதற்காக ஒவ்வொருவரையும் தேடிகொண்டிருக்கின்றார். இவ்வாறே 2010 ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் சரத்பொன்சேகாவு தோல்வியை ஒன்றும் இல்லாமல் போனார். இந்நிலையிலேயே தனது வலையில் சிக்க வைப்பதற்காக ரணில் விக்கிரம சிங்க ஒருவரை தேடிகொண்டிருக்கிறார். அவ்வாறு அவருடைய வலையில் சிக்குபவருக்கு அடுத்த வருடம் மே மாதத்தில் தான் அதன் பிரதிபலன் தெரியும்.

மைத்திரிபால சிறிசேன

அமைச்சர் மைத்திரிபால சிறிசேன எதிரணிக்கு செல்வாரா அல்லது பொதுவேட்பாளராக களமிறங்குவாரா என்பது தொடர்பில் எமக்கு தெரியாது. இதுதொடர்பில் அவரிடமே கேள்வி கேட்க வேண்டும். நேற்று மாலை வரை அவர் எம்முடன் தான் இருந்தார். அரசாங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் அமைச்சரவை கூட்டம் ஆகியவற்றிலும் பங்கு பற்றியதோடு தமது அபிபிராயங்களையும் வெளிப்படுத்தினார்.

சந்திரக்கா குமாரதுங்க

முன்னாள் ஜனாதிபதி சந்திரக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டை பற்றியோ அல்லது நாட்டு மக்களை பற்றியோ அவர் சிந்திப்பதில்லை. மாறாக தனது மகனுக்கு ஒரு எதிர்காலத்தை பெற்றுகொடுப்பதிலேயே அவர் குறிக்கோளாக உள்ளார்.

மீண்டும் இருண்ட யுகத்துக்கு செல்ல முடியாது

நாட்டில் இருந்த கொடிய யுத்தத்தை நிறைவு செய்த ஜனாதிபதி, நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் சென்றுள்ளார். 2005 ஆம் ஆண்டுகளில் நாடு இருந்த நிலை பற்றி மக்களுக்கு புரியும். எனவே மீண்டும் ஒரு இருண்ட யுகத்துக்கு நாட்டை மக்கள் கொண்டுச் செல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. ஒவ்வொரு நாளும் பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படுகின்றதே தவிர பிரச்சினைகள் வளர்க்கப்படுவிதில்லை.
<நன்றி வீரகேசரி>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :