எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகிறது பொது பல சேனா!

திர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு தயார் என்று பொது பல சேனா தெரிவித்துள்ளது. 

'எங்களுக்கு நான்கு தெரிவுகள் உள்ளன. அவையாவன தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பது, எதிர்க்கட்சிக்கு ஆதரவளிப்பது, நடுநிலைமையுடன் நிற்பது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது' என பொதுபல சேனாவின் செயலாளர் வண. கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

'பல கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தை அவதானித்த பின்னர், இறுதித் தெரிவுக்கு நாங்கள் தயார். அரசியல் கட்சிகள் பௌத்தத்துக்கு எவ்வளவு முக்கியத்துவத்தை வழங்கப்போகின்றன என்பதைப் பொறுத்து நாங்கள் தீர்மானிப்போம்' எனவும் அவர் கூறினார். 

சரியான நேரத்தில் பொருத்தமான முடிவை எடுக்கவேண்டும் என்பதுடன், மக்களின் கருத்துப் பற்றி தனது அமைப்பு விழிப்புடன் இருப்பதாகவும் அவர் கூறினார். 

எவ்வாறாயினும், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இன்னமும் திட்டவட்டமாக இல்லை. போட்டியிடுவது என்றால் குறைந்தபட்சம் 100,000 வாக்குகளைப் பெறவேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். 

'குறைந்தபட்சம் 100,000 வாக்குகளை நாங்கள் பெற்றுக்கொள்வோம். இதன் மூலம் நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்துவோம்' எனவும் அவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :