மீராவோடை அமீர் அலி வித்தியாலையத்தின் நான்காவது பரிசளிப்பு இன்று- படங்கள்

ஓட்டமாவடி, அஹமட் இர்ஸாட் -

ல்குடா, மீராவோடையில் குறைந்த வளங்களுடன் 2008 ம் ஆண்டு முன்னால் அமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகான சபை உறுப்பினருமான அல்-ஹாஜ் MSS.அமீர் அமீர் அலி அவர்களின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப பாடசாலையான அமீர் அலி வித்தியாலையத்தின் நான்காவது பரிசளிப்பு இன்று (13.11.2014) வியாழக்கிழமை மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் பாடசாலையின் முதல்வர் M.மஃரூஃப் தலைமையில் மிக கோலாகலமாக இடம்பெற்றது.











இவ்வைபவத்துக்கு பிரதம அதீதியாக இப்படசாலை உறுவாவதற்கு காரணகர்த்தாவாக இருந்த முன்னால் அமைச்சரும் சட்டத்தரனியுமான அல்-ஹாஜ் MSS. அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டதுடன், கெளரவ அதீதிகளாக மட்டகளப்பு மத்தி வளயக்கல்விப் பணிப்பாளர் ஜனாப் AM.அஹமட் லெப்பை, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் KBS.ஹமீட் ஆகியோரும், சிறப்பு அதீதிகளாக அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அல்ஹாஜ் MMS.ஹாரூன் (ஸஹ்வி), மட்டகளப்பு மத்தி கல்வி வளைய அதிகாரிகளான அல்-ஹாஜ் MTM.அஸ்ரஃப், ஜனாப் AL.மீராசாஹிப், ஜனாப் IM.இப்றாஹிம், முன்னால் கல்வி அதிகாரிகளான ஜனாப் SMM.அமீர், அல்-ஹாஜ் M.சுபைர் ஆகியோருடன் விசேட அதீதிகளாக ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் HM. றுவைத், அக்கீல் டயர் மோட்டர்ஸ் உரிமையாளர் அல்-ஹாஜ் MAC.நியாஸ், கோறளைப்பற்று மேற்கு அதிபர்களும், பெருமளவில் பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியின் போது இணைய நாளிதல்களுக்கு தனது கருத்தினை தெரிவித்த பாடசாலையின் முதல்வர் M.மஃரூஃப் இப்பாடசாலையானது 2008ம் ஆண்டு முன்னால் அமைச்சரின் கூடியபங்களிப்பினால் ஆரம்பிக்கப்பட்டாலும், முன்னால் கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஜவாஹிர் சாலிஹ், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் KBS. ஹமீட், இப்பாடசாலைக்கு சகாய விலையில் இடத்தினை தந்த மர்ஹூம் விதானைக் கண்டு நூர்முஹமட் ஆகியோர்கள் வரலாற்றில் அழிக்க முடியாத பங்களிப்பை செய்துள்ளதாகவும், அன்று தற்காலிக கொட்டிலில் மூன்று ஆசிரியர்களுடனும்,111 மாணவ, மானவிகளுடனும் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையானது இன்று மூன்று மாடி கட்டத்துடனும் 12 ஆசிரியர்களுடனும் 348 மாணவ, மாணவிகளுடனும், இதுவரைக்கும் 19 பேர் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து முன்னேற்ற பாதையை நோக்கி செல்வதற்கு இவர்களினால் செய்யப்பட்ட முயற்சியும் பலாபலன்களுமே முக்கிய காரணம் என்பதை சுட்டிக்காட்டினார்.

இங்கு உரையாற்றிய பிரதம அதீதி முன்னால் அமைச்சர் MSS.அமீர் அலி அவர்கள், கற்பித்த ஆசிரியர்களை எவ்வாறு சமூகம் கெளரவப்படுத்த வேண்டும் என்பதனையும்,அதற்கு பெற்றோர்களின் பங்கு மிக முக்கியமானது என்பதை சுட்டிக்காட்டியதுடன், கல்குடா பிரதேசத்தில் தனிப்பட்ட கோபதாபத்தினால் ஏற்படுகின்ற பொறாமைகளை புறம்தள்ளி வைத்துவிட்டு எமது பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்காக எமது பாரளமன்ற பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்வதில் எமது பிரதேசமக்கள் ஒன்று பட வேண்டும் எனக்கூறியதுடன், இப்பிரதேசத்தின் முக்கிய பிரச்சனையாக இருந்த வடிகான் பிரச்சனையை மக்களின் வேண்டுகோளுகினங்க தான் நிரைவேற்றி வைத்ததாகவும், அதே போலவே முதன் முதலாக தானே புற்று நோயிலிருந்து எமது மக்களை பாதுகாப்பதற்காக அமைச்சர் அதாவுலாவுடன் சேர்ந்து தூய குடி நீர் திட்டத்தினை முன்னெடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டதாகவும், எனது அரசியல் வாழ்க்கையில் தூய குடிநீர் திட்டத்தினை நிட்ச்சயம் நிறைவேற்றி வைப்பதாகவும் உறுதியளித்ததுடன், எனது அரசியல் வாழ்க்கையில் தான் எப்போதும் இப்பிரதேசத்தின் கல்விக்கே முன்னுரிமை கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

இதன் போது மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகளுக்கு அதீதிகளினால் பதக்கங்களும், பரிசில்களுக் வழங்கி வைக்கப்பட்டதோடு, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு காரணமாய் இருந்த ஆசிரியர்களுக்கு பெற்றோர்களாலும், பாடசாலையினாலும் பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் முன்னால் அமைச்சரினால் பாடசாலைக்கு போட்டோகொப்பி இயந்திரமும் கையளிக்கப்பட்டதுடன், அதீதிகளுக்கு பாடசாலையினால் பகற்போசன விருந்துபசாரமும் வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :