எதிரணி சார்பாக போட்டியிட உள்ள பொதுவேட்பாளர் யார் என்பதை இன்று மாலை அறிவிக்கப்படும்- மனோ

ஜனாதிபதி தேர்தலில் எதிரணி சார்பாக போட்டியிட உள்ள பொதுவேட்பாளர் தொடர்பான விபரங்கள் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் அறிவிக்கப்படும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

எதிரணியினர் இன்று பிற்பகல் மூன்று மணியளவில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுடன் சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளனர். 

அதன் பின்னர் மாலை 7 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக யார் களமிறங்குவார் என்பது தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்படும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :