அத்துரலிய ரத்ன தேரரை விகாரையிலிருந்து வெளியேற்றுமாறு கோரி கடிதம் அனுப்பிவைப்பு!

ஜாதிக ஹெல உறுமயவின் இணைத் தலைவரும் கோட்டே சதஹம் செவன விகாராதிபதியுமான அத்துரலிய ரத்ன தேரரை குறித்த விகாரையிலிருந்து வெ ளியேற்றுமாறு கோரி அரசாங்க ஆதரவாளர்கள் கோட்டே நகரசபை தலைவருக்கு கடிதமொன்றை கையளித்துள்ளனர்.

கோட்டே கௌதமி வீதி ராஜகிரியவில் அமைந்துள்ள குறித்த விகாரையிலிருந்து அத்துரலிய ரத்ன தேரரை வெளியேற்றுமாறே கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கோட்டே நகரசபைத் தலைவரிடம் கடிதம் கையளித்த குழுவினர் குறித்த விகாரையை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டமையினால் இப்பகுதியில் நேற்று காலை பதற்றம் நிலவியது.

இதனையடுத்து விகாரையைச் சூழவுள்ள பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கடந்த 2007ஆம் ஆண்டு இந்த விகாரை அத்துரலிய ரத்ன தேரருக்கு கையளிக்கப்பட்டிருந்தது. தற்போது அத்துரலிய ரத்ன தேரர் உட்பட ஹெல உறுமயவினர் அரசாங்கத்தில் வகித்துவந்த பதவிகளிலிருந்து வெளியேறியுள்ள நிலையிலேயே இந்த விகாரையிலிருந்து அவரை வெளியேற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் விகாரைக்கு வருகை தந்த அத்துரலிய ரத்ன தேரர் அரசாங்கம் இவ்வாறான வெசயற்பாடுகளை மேற்கொள்ளாது கடந்த 2 தேர்தல்களிலும் எமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வரவேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :