தரம் - 5 புலமைப் பரிசில் வெட்டுப்புள்ளி சிங்கள மொழி மூலம் 157. தமிழ் மொழி மூலம் 152.

பொத்துவில் செய்தியாளர் எம்.ஏ.தாஜகான் -


வ்வாண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை, கடந்த ஆகஸ்ட் 17ஆம் திகதி நடை பெற்றது. இப்பரீட்சைக்கு விண்ணப்பித்த 3இலட்கத்து 35ஆயிரத்து 585பேர்களில் 3 இலட்சத்து 27 ஆயிரத்து 648பேர் தோற்றியிருந்தனர். 

இப்பரீட்சைக்கான பெபேறுகள் கடந்த 27ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது. இதன் போது, இப்பரீட்சைக்கான ஆகக்கூடுதலான வெட்டுப்புள்ளியாக சிங்களமொழி மூலத் திற்கு 163 ஆகவும், தமிழ்மொழி மூலத்திற்கு 159 ஆகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்பெறுபேறுகளின்படி இப்பரீட்சைக்குத் தோற்றியவர்களில்; 78.90 சதவீமானவர்கள் சித்தி பெற்றிருப்பதாக கல்வி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இம்மாணவர்களுக்கான கொடுப்பனவு, அதனைப் பெற்றுக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை என்பன அதிகரிக்கப்படுவதாக ஒக்டோபர் 24ஆம்திக திய வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவிக்கப்பட்டது. அதன்போது 2015 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பெறுவோர் தொகை 15ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாகவும், அவர்களுக்கான கொடுப்பனவு 500ரூபாவிலிருந்து 15ஆயிரம் ரூபா வாக அதிகரிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு மற்றும் மாணவர் தொகைக்கேற்ப நவம்பர் 17ஆம்திகதி புதிய வெட்டுப்புள்ளிகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதன்பிரகாரம் ஆகக்கூடுதலான வெட்டுப்புள்ளி சிங்களமொழிமூலம் 157ஆகவும், தமிழ் மொழிமூலம் 152ஆகவும், ஆகக்குறைந்த வெட்டுப்புள்ளி சிங்களமொழிமூலம் 147 ஆகவும், தமிழ் மொழிமூலம் 142ஆகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அது,கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குரு நாகல், கேகாலை 159இலிருந்து 152ஆகவும், யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக் களப்பு, அம்பாறை, திருகோணமலை, மொனராகல 158இலிருந்து 150ஆகவும், கிளி நொச்சி, பொலன்னறுவ, 157இலிருந்து 150ஆகவும், நுவரேலியா, மன்னார், முல் லைத்தீவு, 157இலிருந்து 149ஆகவும், இரத்தினபுரி 157இலிருந்து 148ஆகவும்,பதுளை 156இலிருந்து 149ஆகவும், புத்தளம் 156இலிருந்து 148ஆகவும், அநுராதபுரம் 155 இலிருந்து 148ஆகவும் ஹம்மாந்தோட்டை, 155இலிருந்து 142ஆகவும் குறைக்கப் பட்டுள்ளது.

இதேவேளை, 2015முதல் இப்பரீட்சைக்கான இரு வினாத்தாள்களையும் ஒன்றாக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது, இந்த இரு வினாத்தாள்களிலும் 70 புள்ளி களுக்குமேல் எடுத்த 2.58,700 மாணவர்களுக்கான சான்றிதழ்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப் பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :