பி. முஹாஜிரீன்-
அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலய மைதானத்தில் பார்வையாளர் அரங்கு அமைக்கப்படவுள்ள இடத்தினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.
இதில் அல் ஹிக்மா வித்தியாலய அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான், பிரதி அதிபர் பி. முஹாஜிரீன், சின்னப்பாலமுனை ஜூம்ஆப் பள்ளிவாயல் தலைவர் ஏ. உதுமாலெவ்வை, பாலமுனை சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக் கழகத்தின் உப தலைவர் எஸ்.எச். தம்ஜீத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீரின் இவ் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து ரூபா 10 இலட்சம் அல் ஹிக்மா வித்தியாலய மைதானத்தில் பார்வையாளர் அரங்கு அமைப்பதற்கென ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
.jpg)
0 comments :
Post a Comment