பாலமுனை ஸஹ்வா இஸ்லாமிய்யா அறபுக் கல்லூரியின் எற்பாட்டில் டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு!

பி. முஹாஜிரீன்-

பாலமுனை ஸஹ்வா இஸ்லாமிய்யா அறபுக் கல்லூரியின் எற்பாட்டில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வொன்று சின்னப்பாலமுனை பிரதேசத்தில் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாலமுனை ஸஹ்வா இஸ்லாமிய்யா அறபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் ஏ.ஆர். சிபான் (மதனி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஏ.எம். ஜெஸீல், சின்னப்பாலமுனை ஜூம்ஆப் பள்ளிவாயல் தலைவர் ஏ. உதுமாலெவ்வை, கிராம சேவை உத்தியோகத்தர் எம். பர்வின், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எச். தம்ஜீத், அறபுக் கல்லூரி விரிவுரையாளர்களான அஷ்ஷெய்க் ஏ. சபீக் (மதனி), அஷ்ஷெய்க் ஏ.என்.எம். நவாஸ், வை. சாஜஹான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச்சிரமதான நிகழ்வின்போது அறபுக் கல்லூரி வளாகம் உட்பட கிராமத்தில் டெங்கு அபாயமுள்ள மற்றும் பொது இடங்கள் என்பன சுத்தம் செய்யப்பட்டன. இதில் பொதுச் சுகாதாரப் பரிசோதகருடன் அறபுக் கல்லூரி மாணவர்கள் வீட்டுத் தரிசிப்புக்களை மேற்கொண்டு வீட்டு உரிமையாளர்களும், வெற்று வளவுச் சொந்தக் காரர்களும் டெங்கு நோய் தொடர்பாக அறிவுறுத்தப்பட்டதுடன் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

டெங்கு நோய் பரவும் அபாயமுள்ள வெற்று வளவு உரிமையாளர்கள் சிலருக்கு பொதுச் சகாதாரப் பரிசோதகர் ஏ.எம். ஜெஸீலினால் 14 நாட்கள் கால அவகாசம் வழங்கி எச்சரிக்கை கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதனை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் அவர் அங்கு வலியுறுத்திக் கூறினார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :