எம்.வை.அமீர்-
சம்மாந்துறை தலை நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் பிரதேசசபைக் கட்டிடத்துக்கு பின்னால் செல்லும் (தனியார் கல்வி நிலையத்துக்கு எதிரே அமைந்துள்ள) வீதியை அன்றாடம் பாடசாலை மாணவர்களும் நகருக்குள் நுழையும் அதிகமான மக்களும் தினமும் பயன்படுத்துகின்றனர்.
நாட்டில் தற்போது பல்வேறு கருத்திட்டங்களின் கீழ் வீதி அபிவிருத்திகளும் ஏனைய அபிவிருத்தி வேலைகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சம்மாந்துறையில் கிழக்குமாகாண அமைச்சர் என்றும் ஜனாதிபதியின் இணைப்பாளர்கள் என்றும் ஏனைய அரசியல் தலைவர்கள் என்றும் உள்ள அனைவரும் அரசாங்கத்துடன் பங்காளிகளாக இருக்கின்ற இச் சமயத்தில் குறித்த இவ்வீதியை இவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது இவ்வீதியில் வசிப்போரினதும் பயணம் செய்வோரினதும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
தற்போது அரசாங்கத்தினால் பிரதேசசபை உறுப்பினர்களுக்குக் கூட அபிவிருத்திக்கு என மில்லியன் கணக்கில் நிதி வழங்கப்பட்டுள்ள இவ்வேளையில் இவர்கள் குறித்த வீதியின் அவலத்தை போக்குவார்களா? என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
0 comments :
Post a Comment