ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான அறிவிப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிற்பகல் 1.30 மணிக்கு கையொப்பமிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையாளரைக் கோரும் விசேட ஆவணத்தில் ஜனாதிபதி சற்று முன்னர் கையொப்பமிட்டுள்ளார்.
இந்த ஆவணம் அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் பின்னர் வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்படும். இதன்படி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கான ஆவணத்தில் கையொப்பமிட்டு தேர்தல் நடத்தப்படுவதனை உறுதி செய்துள்ளார்.
இந்த அறிவிப்பு விடுக்கப்பட்ட உடன் நாட்டின் பல பகுதிகளிலும் பட்டாசு கொளுத்தி ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் தங்களது ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி மற்றும் வேட்பு மனு ஏற்றுக் கொள்வதற்கான இறுதி திகதி இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி மற்றும் வேட்பு மனு ஏற்றுக் கொள்வதற்கான இறுதி திகதி இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment