தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா
தற்போதுள்ள அரசியல் கட்சிகளின் செயல் முறைகளில் பல முக்கியமான மாற்றங்கள் கொண்டு வரப் பட வேண்டிய அவசியம் ஒன்றை எங்களது தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி உணர்ந்துள்ளது .
அதாவது அரசியல் ஆர்வம் உள்ள அடி மட்ட சமூகங்கள் தங்களது தேவைகளையோ அல்லது அபிப்பிராயங்கலையோ அரசியல் ஆட்சியில் உள்ளவர்களிடம் எத்தி வைக்க முடியா நிலையில் பார்வை ஆளர்களாக மட்டும் நிற்பதை நாம் அறிவோம். இவ்வாறன மிக முக்கியமாக கருத்தில் கொள்ளப் பட வேண்டிய விடயத்தை நம் தட் கால அரசியல் வாதிகள் அறியாமையால் இருப்பது மிகவும் அறிவீனமான வேதனைக்கு உரிய விடயமாகும். மக்களால் தெரிவு செய்யப் பட்டோர் அம் மக்களை தேர்தலின் பின் புறக் கணிப்பது என்பது ஒரு ஈனமான செயல்.
இவைகளை எதிர் வரும் காலத்தில் இவ்வாறான குறைபாடுகள் ஏற்படாமல் இருப்பதுக்கு நிவாரணமாக எங்களது தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி
கிராமத்துக்கு ஒரு மக்கள் மன்றம் என்ற முறையில் அமைப்பதன் மூலம் நிவர்த்தி செய்ய பின்வரும் திட்டங்களின் மூலம் மேற் கொள்ளப்பட உள்ளது
திட்டங்கள்
- மகளிருக்கான திட்டங்கள்
- குழந்தைகளுக்கான திட்டங்கள்
- மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள்
- மருத்துவ/சுகாதார சேவை திட்டங்கள்
- முதியோர்களுக்கான திட்டங்கள்
- விவசாயிகளுக்கான திட்டங்கள்
- உழைப்பாளிகளுக்கான திட்டங்கள்
- இளைஞர்களுக்கான திட்டங்கள்
- வேலைவாய்ப்பு திட்டங்கள்
- ஏழைகளுக்கான திட்டங்கள்
இவ் மக்கள் மன்றத்தில் ஊர் சமூகப் சமய பெரியார்கள் ,அரச உத்தியோகத்தர்கள் ,விவசாய்கள் , கடல் தொழிலாளர்கள் , சிறிய , நடுத் தர வணிகம் செய்வோர், படித்த இளைஞ்சர்கள் ,இவ்வாறு பல துறைகளில் ஈடு பாடு உள்ளவர்களும் இம் மன்றத்தில் உள்வாங்கப் பட உள்ளனர் . இவ் அமைப்பின் மூலம் அரசியல் ஆர்வம் உள்ள அடிமட்ட மக்களின் பங்களிப்பும் தேவைகளும்,ஆலோசனைகளும்,கருத்துக்களும்,உயர் மட்ட அரசியலின் கவனத்துக்கு கொண்டு வரப்படும்.
யாரையும் அதிகாரம் செய்வது என் நோக்கம் அல்ல…. நாம் அதிகம் சிந்திக்கிறோம். ஆனால் குறைவாக நேசிக்கிறோம். புத்திசாலித்தனத்தை விடவும் நமக்குத் தேவை மனிதநேயமே. ஜனநாயகத்தின் பெயரால் நாம் இணைவோம். விரோதம் விடுத்து அன்பு கொள்வோம்”
.jpg)
0 comments :
Post a Comment