பி.எம்.எம்.ஏ.காதர்-
கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் ஜே.பி. எடுத்த துரித நடவடிக்கையின் காரணமாக நீண்டகாலமாக கவனிப்பாரற்றுக் கிடந்த மருதமுனை கடற்கரை வீதியின் நிர்மாணப்பணி விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
2.5 கிலோ மீட்டர் நீளமான இந்த வீதி ஐந்து மீட்டர் அகலத்துடனும், ஐந்து வாகனத் தரிப்பிடங்களுடனும் நிர்மானிக்கப் படவுள்ளதாக கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்; இஸட்.ஏ.எச்.றஹ்மான் ஜே.பி தெரிவித்தார்.
இஸட்.ஏ.எச்.றஹ்மான் அவர்களின் அழைப்பின் பேரில் கடந்த 2014-08-28ம் திகதி மருதமுனைக்கு வருகை தந்த மகநெகும தலைவரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான கிங்ஸ்லி ரணவக்கவிடம் மருதமுனை கடற்கரை வீதியை நிர்மானிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இஸட்.ஏ.எச்.றஹ்மான் முன்வைத்தார் அன்று கடற்கரை வீதியையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த வீதியின் நிர்மாணப்பணி விரைவில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் ஜே.பி தெரிவித்தார்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment