மைத்திரிபாலவின் பொதுச்செயலாளர் இடத்திற்கு அநுர பிரியதர்சன யாப்பா நியமனம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராக அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பாவை நியமிக்க கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.

அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி ஜனாதிபதி பொதுவேட்பாளராக போட்டியிடவுள்ள நிலையில் இந்த புதிய நியமனம் வழங்கப்படுகிறது..

இந்தநிலையில் மைத்திரிபால சிறிசேனவின் சுகாதார அமைச்சுப் பதவி உட்பட்ட விலகிய அமைச்சர்களின் இடங்களுக்கு புதியவர்களை நியமிக்காமல், பிரதியமைச்சர்களை கொண்டு பணிகளை முன்கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :