மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அவர்களின் நிதிஒதுக்கீட்டில் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு

 ன்னார் மாவட்டத்தின் முசலி, மாந்தைமேறுகு, நானாட்டான், அடம்பன், மன்னார் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 27 தெரிவு செய்யப்பட்ட கால்நடை பண்ணையாளர்களுக்கு அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து ஒரு பண்ணையாளாருக்கு 10,000 ஆயிரம் ரூபா வீதம் இரண்டு இலட்சத்து எழுபதாயிரம் ரூபா செலவில் கோழிக் குஞ்சுகள், கோழிக்கூடுகளுக்கான பொருத்துகள், ஆடு, மற்றும் சீமெந்து ஆகியன 20-11-2014 அன்று உயிலங்குளம் கால்நடை அபிவிருத்தி திணைக்களத்தில் கௌரவ மாகாணசபை உறுப்பினர் அவர்களின் பங்குபற்றுதலோடு திணைக்களத்தின் துணைப் பணிப்பாளர் டாக்டர் கேதீஸ்வரி அவர்களின் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டன. மேற்படி நிகழ்வின் மூலம் குறித்த பிரதேசத்தின் 27 பண்ணையாளர்களும் அவர்களது குடும்பத்தவரும் பயனடைவார்கள்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர் அவர்கள், அரசியல் என்பது சமூகப் பொறுப்புவாய்ந்த ஒரு பணியாகும் ஆனால் அது இன்று வியாபாரமாக்கப்பட்டிருக்கின்றது. இதன் காராணத்தினால் மக்களுக்காக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் பின்னணியில் அரசியல் ஊறிப்போயிருக்கின்றது. 

ஆனால் நாம் அத்தகைய மோசமான நிலையினை மாற்றியமைக்கவேண்டும் என செயற்படுகின்றோம், அந்தவகையில் இன்றைய நிகழ்வின் பயனாளிகள் அனைவரும் அரசியல் பின்னணியோடு தெரிவு செய்யப்பட்டவில்லை, மத ரீதியில் அல்லது இனத்துவ ரீதியில் தெரிவு செய்யப்படவில்லை, மாறாக தேவையுடையவர்கள் என்ற அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு அதன் அடிப்படையில் பொறுத்தமான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள், இத்தகைய முன்மாதரியினை நாம் எல்லா இடங்களில் பின்பற்றுவோம், இதன் மூலம் நாம் எவ்வித அரசியல் நோக்கத்தினையும் முன்வைக்கவில்லை, இத்தகைய உதவித்திட்டங்களின் மூலம் பயனாளிகளாகிய நீங்கள் உச்சப்பயனை அடையவேண்டும் என்பதுவே எமது எதிர்பார்ப்பாகும், எனத் தெரிவித்தார்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :