மஹிந்தவின் இராஜாங்கத்தை ஒழிக்க நாம் தற்போது முன்வந்துள்ளோம்-இணைந்த ராஜித்த சேனரத்ன

நான் நாட்டிற்காக செயலாற்றவே அரசியலுக்கு வந்தேன். அதனைக் கருத்தில் கொண்டு நான் எனது பதவிகளை துறந்து, மஹிந்தவின் இராஜாங்கத்தை ஒழிக்க நாம் தற்போது முன்வந்துள்ளோம் என ராஜித்த சேனரத்ன தெரிவித்தார்.

புதியநகரமண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது எதிரிகளுக்கு நான் ஒரு போதும் துரோகம் நினைக்கமாட்டேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்திற்கும் எனது குடும்பத்திற்கும் எந்த விதமான பிரச்சினையும் இல்லை. நான் நாட்டிற்காக செயலாற்றவே அரசியலுக்கு வந்தேன். அதனைக் கருத்தில் கொண்டு நான் எனது பதவிகளை துறந்துள்ளளேன்.

இந்த தீர்மானத்திற்காக சிலர் எங்கள் மீது சேறு பூச நினைப்பார்கள். நான் அதனையெல்லாம் பொருட்படுத்த மாட்டேன். நான் எனது நாட்டு மக்களுக்காக வாழத் தயாராகவுள்ளளேன்.நான் இதன் போது ஊடகவியலாளர்களுக்கு ஒன்று தெரிவிக்க விருமபுகின்றேன். நீங்கள் பக்கச்சார்பற்ற நிலையில் நேர்மையாக உங்களுடைய சேவையை செய்ய வேண்டும். அப்போது தான் நீங்களும் வரலாற்றி;ல் இடம்பிடிப்பீர்கள். மக்களுக்கு உண்மையான செய்திகளை நீங்கள் வழங்க வேண்டும்.

இந்நிலையில் நான் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :