ஜனாஸா தொழுகைக்காக சென்ற -காத்தான்குடியைச் சேர்ந்த மௌலவி எம்.ஐ.எம்.ஹஸ்ஸாலி வபாத்!

- மஹரிப் தொழுகையின் பின் ஜனாஸா நல்லடக்கம்-

அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் -அப்பாஸி

காத்தான்குடி முதலாம் குறிச்சியைச் சேர்ந்த மௌலவி எம்.ஐ.எம்.ஹஸ்ஸாலி (பலாஹி) (வயது 55) நேற்று புதன்கிழமை மாலை காத்தான்குடியில் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

ஒரு ஜனாஸா தொழுகைக்காக அவர் சென்ற போதே இம்மரணம் ஏற்பட்டுள்ளது.

காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக்கல்லூரியில் பட்டம் பெற்று வெளியாகிய இவர் கட்டார் கொழும்பு ரெஸ்டுரண்டில் பல வருடங்களாக பணிபுரிந்தது மட்டுமல்லாமல் பல்வேரு சமூக சேவைகளில் ஈடுபட்டும் வந்துள்ளார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் 20-11-2014 இன்று வியாழக்கிழமை மாலை மஹரிப் தொழுகையின் பின்னர் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் ஜனாசா தொழுகை நடாத்தப்பட்டு அப் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவரின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காகவும் கப்று வாழ்க்கை பிரகாசிப்பதற்காகவும் வல்ல இறைவனிடத்தில் பிரார்த்திக்குமாறு அவரின் குடும்பத்தார் மற்றும் அவரோடு கட்டாரில் இருந்த சகோதரர்கள் அனைவரும் கேட்டுக்கொள்கின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :