அரசாங்கத்தின் கொள்கையை மாற்றவே கைகோர்த்துள்ளோம் -சோபித தேரர்

நாட்டில் பயங்­க­ர­வா­தத்­தினை வளர்க்­கவோ, இன­வா­தத்­தினை தூண்­டவோ சகல எதிர்க்­கட்­சி­க­ளையும் ஒன்­றி­ணைத்து பொது எதி­ர­ணி­யினை உரு­வாக்­க­வில்லை. அர­சாங்­கத்தின் கொள்கைத் திட்­டத்­தினை மாற்­றி­ய­மைக்­கவே நாம் கைகோர்த்­துள்ளோம் என தெரி­வித்த சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் இணைப்­பா­ளரும் கோட்டே நாக விகா­ரையின்

விகா­ரா­தி­ப­தி­யு­மான மாது­லு­வாவே சோபித தேரர் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கோ முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கோ தனிக்­கொள்கைப் பத்­தி­ரமோ அல்­லது நிபந்­த­னை­களோ இல்லை. புரிந்­து­ணர்­வு­டனே அனை­வரும் ஒன்று சேர்ந்­துள்­ளனர் எனவும் குறிப்­பிட்டார்.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பு­டனும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸு­டனும் பொது எதி­ரணி தனி நிபந்­த­னை­க­ளுடன் உடன்­ப­டிக்கை செய்­துள்­ள­தாக பொது­ப­ல­சேனா அமைப்பு குற்றம் சுமத்­தி­யுள்ள நிலையில் இது தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

அர­சாங்­கத்தின் மீதுள்ள அதிர்ப்­தியும் அர­சாங்­கத்தின் பாதை­யினை மாற்றி அமைக்­க­வுமே நாம் ஆரம்­பத்தில் இருந்து செயற்­பட்டு வந்தோம். இப்­போதும் நாங்கள் சகல எதிர்­கட்­சி­க­ளையும் ஒன்­றி­ணைத்­தி­ருப்­பதும் நாட்­டையும் மக்­க­ளையும் காப்­பாற்­றவே, தவிர நாட்­டிற்கு எதி­ராண தீவி­ர­வா­தத்­தினை ஏற்­ப­டுத்­தவோ அல்­லது இந்த நாட்­டினை அழிவுப் பாதையில் கொண்டு செல்­லவோ அல்ல. பொது எதி­ர­ணியில் சகல கட்­சி­களும் சகல இன மக்­களை பிர­தி­ப­ளிக்கும் தலை­வர்­களும் உள்­ளனர். பௌத்த மதத்­த­லை­வர்கள் சிங்­கள அர­சியல் கட்­சிகள் தமிழ் முஸ்லிம் அர­சியல் கட்­சிகள் என பலரும் உள்­ளனர். எனவே, இவ்­எ­தி­ரணி இன­வா­தத்­தி­னையோ, பிரி­வினை வாதத்­தி­னையோ தூண்டப் போவ­தில்லை.

அதேபோல் தான் சகல கட்­சி­க­ளையும் ஒரு அணியில் ஒன்­றி­னைத்­துள்­ளது. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை இல்­லா­தொ­ழிக்க வேண்டும் என்­ப­தற்­கா­கவே தவிர சர்­வா­தி­கார ஆட்சி நடத்­து­வ­தற்­காக அல்ல. எனவே, புரிந்­து­ணர்­வு­டனும் அனை­வரும் ஏற்­றுக்­கொண்­டுள்ள பொது நிகழ்ச்சி நிர­ழுக்கு அமை­யவே எமது சகல நட­வ­டிக்­கை­களும் அமையப் பெற்­றுள்­ளது.

மேலும், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பு­டனும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸு­டனும் நாங்கள் பேச்சு வார்த்­தை­களை மேற்­கொள்­ள­வில்லை. அவர்கள் இது­வ­ரையில் பொது எதி­ர­ணி­யுடன் கைகோர்ப்­ப­தாக தெரி­விக்­கவும் இல்லை. எனினும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ரு­ட­னான சந்­திப்­பினை கூட்­ட­மைப்பு மேற்­கொண்ட போது தனி நிபந்­த­னை­க­ளையோ, கொள்­கை­க­ளையோ முன்வைக்கவில்லை. அவர்கள் அனைவரும் பொது கொள்கையொன்றில் நாட்டை மீட்டெடுக்கும் முயற்சியினையே மேற்கொள்கின்றனர். எனவே இதில் எவரினதும் தனி நிபந்தனைகளுக்கு இடமில்லை என்பதை சகல கட்சிகளும் தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :