அக்கரைப்பற்றில் தடை செய்யப்பட்ட கோல்ட் சீல் ரக சிகரட் வைத்திருந்த பெண்ணுக்கு 15,000ரூபா அபராதம்!

பி. முஹாஜிரீன்-

க்கரைப்பற்றுப் பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட சட்டவிரோத கோல்ட் சீல் ரக சிகரட் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவருக்கு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவானுமாகிய எச்.எம்.எம். பசீல் ரூபா 15 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்.

அக்கரைப்பற்று பழைய சினிமா வீதியில் நேற்று (19) அக்கரைப்பற்றுப் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணை அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவானுமாகிய எச்.எம்.எம். பசீல் முன்னிலையில் இன்று (20) வியாழக்கிழமை ஆஜர் செய்தபோது ரூபா 15 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :